முன் குறிப்பு :
மறக்காமல் பின் குறிப்பையும் படிக்கவும்
ஊடக தர்மம்
உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் படைப்பே ஊடகம். செல்ல முடியாத பகுதிகளிலும் ஊடுருவி உண்மையை உலகத்துக்கு தெரியப்படுத்துகிற பங்கை ஊடகங்கள் ஆற்றுகின்றன. உலகின் நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்கள் ,புரட்சிகள் ,போர்கள் ,போர்நிறுத்தம் ஆகியவற்றிட்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊடகங்களின் பங்கு அளப்பரியது.அதனால் தானோ என்னவோ பத்திரிக்கை நண்பர்கள் அடிக்கடி சொல்லும் வாசகம் "கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது".
மக்களின் வாழ்வியலில் ஊடகங்களின் பங்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. கல்வி (doordarshan மற்றும் சில் ஊடகங்கள்),கலாச்சாரம், வணிகம்,விளையாட்டு ,பொழுதுபோக்கு மற்றும் வேளாண்மை என பலதரப்பட்ட பயன்களை நமக்க அள்ளி வழங்குகின்றன. உண்மையின் உரைக்கல்லாக இருக்க வேண்டிய பத்திரிக்கைகளும் செய்தி நிருவனங்களும் இன்று இருக்கும் நிலைமை என்ன ??
இந்தியாவில் ஊடக சுதந்திரம் என்பது நிறையவே இருக்கிறது.ஆனால் உடகங்களின் போக்கு மக்களின் நலன் மற்றும் சமூக அக்கறையை விட வணிக நோக்கிலான லாபத்தையே அடிப்படையாக கொண்டிருக்கிறது. மக்களுக்கு உண்மையை மட்டுமே சொல்ல வேண்டிய ஊடகங்கள் இன்று அரசியல் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.
ஊடக தர்மங்களில் மிகவும் முக்கியமானதாக உங்களால் நடுவு நிலைமையை சொல்ல முடியும். ஆனால் இன்று தமிழகத்தில் நடுவு நிலைமையுடன் செயல்படும் ஊடகங்களை விரல் விட்டே எண்ணி விடலாம். ஆக நிகழ்வுகளை தங்கள் விருப்பதுக்கு தகுந்தமாதிரி ஊடகங்கள் வெளியிடுகின்றன. இவர்களுக்கு உண்மையை பற்றியோ மக்களை பற்றியோ எந்த கவலையும் இல்lai.எதிர் கால வரலாற்றில் ஊடகங்கள் பங்களிப்பு மகத்தானது. ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டு வரலாற்றை மாற்றி குழப்பம் விளைவிக்க பார்கிறார்கள்
அதோடு தங்களின் கொள்கைகளை(!!) மக்கள் மீத திணிக்கவும் ஊடகங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள். அரசியல் வரலாற்றையே மாற்றியமைத்த ஊடகங்கள் இன்று தமிழகத்தில் அரசியலின் கீழ் சிக்கி திணறுகின்றன. நாட்டில் நிலவும் மக்களின் போராட்டங்கள் மற்றும் பிரச்சனைகளை விட ஊடகங்களுக்கு மற்ற விசயங்களே முக்கியமாகி விடுகின்றன.
ஒரு பெண்ணை வேசியாக காடும் இன்றைய ஊடகங்களோடு சுதேசமித்திரன் ,நவசக்தி போன்ற இதழ்களை என்னால் ஒப்பிட்டு கூட பார்க்க முடியவில்லை. அன்றைய ஊடகங்கள் சுயமரியாதை ,நாட்டுப்பற்று போன்ற அறநெறிகளை போதித்தன. இன்றிய ஊடகங்களின் போதனைகளை நான் சொல்ல விரும்பவில்லை. ஒன்றும் இல்லாத விஷத்தை பெரிதாகவும் பெரிய விசயங்களை ஒன்றுமே இல்லாதது போலவும் சித்தரிப்பது இன்றைய ஊடகங்களின் பாணி. நடிகையின் நாய்குட்டி அடிபட்டுவிட்டதை தெரிவிக்கும் ஊடகங்கள் கூடங்குளத்தில் தங்களது வாழ்வாதாரத்துக்காக போராடும் அப்பாவி மக்களையும் அவர்களின் மீதான அடக்குமுறையையும் தெரிவிக்க விரும்பவில்லை. கட்சி பொதுகூட்டத்தை தெரிவிக்கும் இவர்களால் ஏழை விவசாயிகளின் உண்ணாவிரதத்தை பற்றி தெரிவிக்க விரும்பவில்லை.
தமிழகத்தில் மக்களின் மீதான ஊடகங்களின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் அவை மக்களுக்கு துரோகமே செய்கின்றன. மரணத்தை கூட வியாபாரமாக்கும் தந்திரம், ஒரு குறிப்பிட மக்களின் சமுதாயத்தை தாக்கும் வகையிலான பதிவுகள் என பல்வேறு தீங்குகளை நமக்கு நாளும் செய்கிறார்கள் .
இன்றுவரை நதிநீர் பிரச்சனைகள் ,தமிழ் ஈழம் ,மதவேற்றுமைகள் என பல்வேறு செய்திகளை வைத்து கொண்டு குளிர் காய்கிறார்கள். இலங்கை யுத்தத்தில் (யுத்தம் அல்ல இன அழிப்பு ) ஆயிரகணக்கான அப்பாவி மக்கள் கொல்ல பட்ட போது நம்மை ipl match பார்க்க வைத்தார்கள்.
ஆபாச காட்சிகளுக்கு மட்டுமே இந்தியாவில் தணிக்கை (censored) இருக்கிறது. மக்களின் மனதை காயபடுத்தும் அல்லது பிளவை உண்டாக்கும் பதிவுகளையும் கட்டாயம் தணிக்கை செய்யவேண்டும். அதுவும் இந்திய போன்ற பெரிய பல்வேறு விதமான மக்கள் வாழும் நாடுகளில் இத்தகைய தணிக்கை என்பது கட்டாயம் வேண்டும். மதம் சமந்தப்பட்ட பதிவுகளையும் கட்டாயம் தணிக்கை செய்ய வேண்டும்
ஊடகங்கள் மீதான அளவு கடந்த மோகமும் மக்களுக்கு குறைய வேண்டும். அரசியல் செயல்பாடுகளினால் ஏற்படும் மக்களின் இன்ப துன்பங்களை ஊடகங்கள் உலகிற்கு உணர்த்தவேண்டும். அதைவிடுத்து பொழுதுபோக்கு என்ற பேரில் மக்களை அடிமைபடுத்த பார்க்கும் பேதமையை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்
ஊடக சுகந்திரம் குறித்த சட்ட திட்டங்கள் சரியாக இருப்பதாக நான் கருதுகிறேன். இல்லையெனில் அவையும் சரி செய்ய படவேண்டும். இதுவரையில் பிரச்சனைகளுக்கு மட்டுமே காரணமாயிருந்த ஊடகங்கள் இனி நல்ல தீர்வுகளுக்கும் காரணமையிருந்தால் நன்றாக இருக்கும்
மக்களின் என்ன ஓட்டங்களை அரசுக்கும் உலகிற்கும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ஊடகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும்
நடுவுநிலைமை , வையகத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள் ,மக்களை பாதிக்காத வண்ணம் செய்திகளை முறைபடுத்துதல் , மக்களின் சுயசிந்தனையை வளர்க்க உதவுதல் போன்ற பல்வேறு பணிகளை மீடியாக்கள் நிறைவேற்றினால் இனி வரும் காலம் சிறக்கும்.
நன்றி வணக்கம்
பி.கு
இந்த பதிவு எந்த ஒரு ஊடகத்தை உயர்த்தியோ தாழ்த்தியோ கூற வேண்டும் என்பதற்காக பதிவு செய்யபடவில்லை. ஊடகம் மீதான எனது இந்த பார்வையினால் யார் மனதாவது புண்படநேர்ந்தால் நான் மன்னிப்பு கோருகிறேன்
இந்த விமர்சனம் யாரையும் காயப்படுத்தவோ அல்லது திருப்திபடுத்தவோ எழுதப்படவில்லை
வாழ்க தமிழ்!!! வெல்க தமிழ்!!!

No comments:
Post a Comment