October 18, 2013

நந்தி புரத்து நாயகி- புத்தகம் பற்றிய பேச்சு

நந்தி புரத்து நாயகி- புத்தகம் பற்றிய பேச்சு
திரு.விக்கிரமன் அவர்கள் எழுதிய நந்தி புரத்து  நாயகி என்ற புதினம் வாசித்தேன்.     பொன்னியின் செல்வன் நாவல் முடிவுற்ற பிறகு இந்த கதை தொடங்குகிறது. ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து கதையை நகர்த்தாமல் வரலாற்று நிகழ்வுகள் வைத்து கதையை கொண்டு போகும் யுக்தி அருமை.

இனி கதைக்கு வருவோம்

உத்தம சோழர் மதுராந்தகர் (சேந்தன் அமுதன் ) ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு உள்நாட்டு குழப்பங்களை தவிர்க்க இளைய பிராட்டி குந்தவை தன தம்பி அருள்மொழி வர்மரை சித்திரசேனன் எனும் வணிகன் வேடத்தில் கடல் கடந்து அனுப்பி வைக்கிறார். அவர் சென்று திரும்ப பத்தாண்டுகள் ஆகி விடுகிறது. அந்த சமயத்தில் சேனாதிபதியாக இருக்கும் பார்த்திபேந்திர பல்லவன் ஆதித்த கரிகாலர் கொலை வழக்கில் வந்திய தேவனை குற்றவாளியாக்கி பாதாள சிறையில் அடைத்து விடுகிறான்.இதனால் இளைய பிரட்டி மீள துயரில் ஆழ்கிறார். மன்னர் மதுராந்தகர் நோய்வாய்ப்பட சுந்தர சோழர் மறைவுக்கு பின் அன்பில் அநிருத்தரும் தன் முதலமைச்சர் பதவியைவிட்டு சென்று விட இளைய பழுவேட்டையர் முழு பொறுப்பையும் கவனிக்கிறார்.பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ரவிதாசன் குழுவினர் நாணய  சாலையில் இருந்து கொள்ளையடிக்க ,வணிக மரக்கலங்களை கொள்ளையர்கள் கொள்ளையடிக்க சோழ நாடு ஸ்திரத்தன்மையை இழந்து நிற்கிறது. கடல் கடந்து செல்லும் சித்திரசேனன்  முல்லை தீவில் நடன மங்கை இன்பவல்லியை கண்டு aval மேல் காதல் கொள்கிறார். மரக்கலம் அங்கிருந்து கிளம்ப திருமி வந்து மணப்பதாக வாக்கு கொடுக்கிறார்.கடல்கொள்ளயர்களால் முல்லை தீவு பாழாக அவள் சித்திரசெணனை தேடி சோழ நாடு செல்கிறாள்.


கடல் பயணத்தை முடித்து நாடு திரும்ப  என்னும் அருண்மொழிக்கு தன் தந்தை இறந்ததும் ,வந்திய தேவர் சிறைப்பட்டதும் தெரிய வர சிவனடியார் வேடம் பூண்டு சோழ நாடு செல்லும் அவர் பாழையரையில் குந்தவை மற்றும் வானதியை சந்திக்கிறார். பின் காளமுகர் ஒருவரோடு இணைந்து ஆதித்த கரிகாலரை கொன்றவர்களை பற்றி அறிய செல்கிறார்.காளமுகர் ரவிதாசன் குழுவோடும் சேர்ந்து அவன் சதி திட்டங்களை இளவரனுக்கு  தெரிவிக்கிறார் .


வந்திய தேவனை சிறையிட்டால் குந்தவை மீது தான் கொண்ட காதல் நிறைவேறும் என என்னும் பார்த்திபேந்திரன்,அது நடக்காமல் போகவே ரகசியமாக ஆயுதங்கள் மற்றும் படைகள் திரட்டி போர் செய்ய முயலுகிறான்.வீரபாண்டியன் மகன் அமரபுஜங்கனும் காட்டில் இருந்த படியே படை திரட்டுகிரான். குந்தவையை சதி seithu கொள்ள ரவிதாசன் முயல அவனுக்கும் பாண்டிய தலைவிக்கும் (நந்தினி என நினைக்கிறேன் ) கருத்து வேறுபாடு எழ ரவிதாசன் தன சகாக்களுடன் தனியாக சென்று விடுகிறான்.

அருண்மொழி தன் மருவேடத்தை கலைத்தவுடன் பார்த்திபேந்திரன் காஞ்சியை முற்றுகையிடுகிறான். அவனை சிறிய பழுவேட்டையர் தன் சிறிய வேளைக்கார படையுடன் சென்று வெற்றி கொள்கிறார் .ஆனால் படுகாயமடைந்து  மரண படுக்கையில் வீழ்கிறார். அருண்மொழியிடம் தன் அன்னம் மகளை மணக்க வேண்டும் எனவும் அவளே பட்டத்து ராணியாக வேண்டும் எனவும் வாக்குறுதி வாங்கி கொண்டு மாளுகிறார்.வேளைக்கர படைத்தலைவன் சங்கர தேவனுடன் இணைந்து வந்திய தேவர் ரவிதாசன் கும்பலை கைது செய்கிறார்

பின் அவையில் வந்திய தேவர் குற்றமற்றவர் என்பது தெளிவாகிறது.இந்நிலையில் வானதி ஒரு ஆண் மகவை ஈன்றெடுக்கிறாள் நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் போது தன் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை குந்தவையிடம் ஒப்படைத்துவிட்டு வானதி இறக்கிறாள்.

பி வந்திய தேவர் - குந்தவை திருமணம் நடக்கிறதா ? அருண்மொழி - இன்பவல்லி இணைந்தார்களா? என்பதே முடிவு

நந்தி புரத்து  நாயகி என்பது இளைய பிராட்டியை குறித்தாலும் அவரை சுற்றியே கதை பின்னப்படாதது வியப்பு
 அருண்மொழி -இன்பவல்லி காதல் காட்சிகள் மிக மிக அருமை. தன் மனைவியிடம் காதலியை பற்றி தெரிவுக்கும் இடத்தில தடுமாறுவது அழகு.இன்பவல்லி ,பஞ்சவன் மாதேவி ,வானதி என மூன்று பெண்களின் அன்பால் அருண்மொழி தடுமாறுகிறார்

நடனம் மற்றும் படுவதில் thiramai பெற்ற இன்பவல்லியின் பாத்திர படைப்பு அருமை

காதலா? கடமையா? என அருண்மொழியும் காதலா கலையா? என்ற நிலையில் இன்பவல்லியும் தள்ளப்படுவது அருமை.


தியாக செம்மலாகவே வருகிறார் குந்தவை வந்திய தேவரை பிரிந்து வாடும் இடத்திலும் ,வானதியின் புதல்வனை வளர்க்கும் இடத்திலும் நெகிழ வைக்கிறார். இன்பவல்லியை தன் தம்பி மறக்க அவர் படும் பாடு அப்பப்ப !

தன் கணவன் இதய சிம்மாசனத்தில் தான் மட்டுமே அமர வேண்டும் என மனதுக்குள் புழுங்கி அவர் இறப்பது பெரிய சோகம்

இன்னும் பல கதாபாத்திரங்கள் கதைக்கு உயிர் கொடுக்கின்றன


குந்தவை - வந்திய தேவரின் பக்குவப்பட்ட காதல் , அருண்மொழி - இன்பவல்லியின் கலை காதல் அமரபுஜங்கன் - மாதங்கியின் சிறு பிள்ளை காதல்,கடமை வீரன் சங்கரதேவன் - சுமதியின் காதல் என பலவற்றை பார்க்க முடிந்தது





தஞ்சை பெரிய கோவில் விமான கலசம் இன்பவல்லிக்கு அர்ப்பணிப்பது,, இன்பவல்லி பாடும் குமரன் வர கூவுவாய் 
குயிலே எனும் பாடல் என பல சிறப்புகள் உள்ளன

காளமுகர் யார் என்பதை முன்னமே யூகிக்க முடிகிறது

பொன்னியின் செல்வன் கதையோடு இது சில இடங்களில் முரண்பாடு கொள்கிறது

பாண்டிய குமாரன் படைஎடுத்தானா? அவன் முடிவு என்ன ? கடல் கொள்ளையர் ஒழிக்கபட்டனரா போன்ற கேள்விகளுக்கு விடை இல்லாமல் இருப்பது வருத்தம் அளித்தது


முல்லைத்தீவின் வர்ணனை மற்றும் காஞ்சி பொன் மாளிகையின் சிறப்பு அருமை






பி.கு

சிறிது காலதாமதமாகி விட்டது . என் தட்டச்சு பேழையில் ஏற்பட்ட பழுது காரணமாக சில பிழைகள் ஏற்பட்டு இருக்கலாம். அதற்காக மன்னிக்கவும்

நன்றி வணக்கம்

வாழ்க தமிழ்!!!!! வெல்க தமிழ் !!!!

2 comments:

  1. படிக்க தூண்டும் விமர்சனம்... பதிவிட்டதற்கு நன்றி நண்பரே...

    ReplyDelete