October 07, 2013

இந்திய விளையாட்டுகள் பற்றிய ஒரு அலசல்

இந்திய விளையாட்டுகள்

விளையாட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வை தரும் அருமருந்து.
உடல் உறுதியையும் தேக பயிற்சியையும் விளையாட்டுகள் நமக்கு வழங்குகின்றன
.எல்லாவற்றையும் விட மேலாக இந்தியாவில் தேசிய  ஒருமைப்பாட்டை வளர்க்கும்
ஒரு காரணியாகவும் விளையாட்டுகள் திகழ்கின்றன.

இந்தியாவில் பல்வேறு விளையாட்டுகள் இருந்தாலும் ஆங்கிலேயரிடம் இருந்த
கற்ற காரணத்தினாலோ என்னவோ கிரிக்கெட் பிரபலமாகிவிட்டது .ஆனால் இன்றைய
சூழ்நிலையில் கிரிக்கெட் பணம் கொழிக்கும் வணிக களமாக
மாறிவிட்டது.அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் லாபம் தரும் அட்சய
பாத்திரமாகவே மாறிவிட்டது.மக்களின் ரசனை இவர்கள் போதைக்கு ஊறுகாய்
ஆகிவிட்டது .ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் இடம் பார்த்து கவலை
படும் நாம் மற்ற விளையாட்டுகளை விரும்பி பார்பதில்லை.அரசும் மற்ற
விளையாட்டுகளுக்கு முழுமையான ஆதரவு அளிக்கவில்லை.நடைவண்டியும் இல்லாமல்
கைநீட்டி அழைப்போரும்  இல்லாமல் எழ முயலும் குழந்தைபோல் உள்ளது இதர
விளையாட்டுகளின் நிலைமை.
தேசிய விளையாட்டான ஹாக்கியை எடுத்து கொண்டால் ஒரு காலத்தில் உலகையே
நடுநடுங்க வைத்த நாம் இன்று மற்ற அணிகளை கண்டு மிரள்கிறோம்.அண்மையில்
பிரான்ஸ்  நாட்டில் அந்த அணிக்கு எதிராக கொட்டும் மழையில்,உறை
வெப்பநிலையில் நம் வீரர்கள் ஆடிய ஆட்டம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது
.அப்போதுதான் நினைத்தேன் மீன்குஞ்சுக்கு நீந்தவா கற்று
தரவேண்டுமென்று.நாம் மீண்டும் நம் பழையநிலையை அடைந்து விடலாம் .அதற்கு
தேவை பயிற்சி மட்டுமல்ல உற்சாகபடுத்தும் மக்களும்தான் .

வில்லோடு விளையாடிய மறவர்கள் வாழ்ந்த நாட்டில் வில்வித்தையில்
இந்தியாவின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.தரவரிசையில் முதல் மூன்று
இடங்களுக்குள்ளேயே வலம் வரும் தீபிகா குமாரி  புதிய நம்பிக்கையை
ஏற்படுத்துகிறார்.சீனாவும் கொரியாவும் ஆதிக்கம் செலுத்தும்
வில்வித்தையில் நாம் உலகாளும் நாள் வெகு தொலைவில் இல்லை .

ஆனால்  வாள்சண்டையில் போதிய உபகரணங்களும் கட்டமைப்பு வசதிகளும்
இல்லாததால் இத்தாலி போன்ற உலக தரம் வாய்ந்த அணிகளுக்கு சவால் விட
முடியவில்லை. அரசு வாள்சண்டை வசதிகளை புணரமைத்தால் வாள் யுத்தத்தில் நம்
வீரம் புதுப்பிக்கப்படும்.

மற்றொரு பாரம்பரிய விளையாட்டான மல்யுத்தத்தில் கடந்த ஒலிம்பிக்கில் நம்
வீரர்களின் திறன் அனைவரையும் வியக்க வைத்தது. இனி வரும் காலங்களில்
அதிகமான  பதக்கங்களை மல்யுத்தத்தில் நாம் அறுவடை செய்ய இருக்கிறோம்
குத்துசண்டையின் அணைத்து பிரிவுகளிலும் இந்தியா புதுசக்தியாகவே
உருவெடுத்துள்ளது மேரி கோம் ,விஜேந்தர் சிங்,லக்ஷ்மிராம் ,விகாஸ்
கிருஷ்ணன் ,மனோஜ்குமார் , சங்வான் என பலவீரர்கள் சாதிக்க
காத்திருக்கிறார்கள்
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் புகழ் நாள்தோறும் உயர்ந்துகொண்டே வருகிறது.
'தங்க மன்னன்' ககன் நரங்,ரஞ்சன் சோதி ,பிந்த்ரா ,ரத்தோர் என பல உலக
அளவில் சிறந்த வீரர்களை நாம் பெற்றிருக்கிறோம்.

சமீப காலங்களில் டென்னிஸ் மற்றும் பாட்மிட்டன் துறைகள் நன்றாகவே வளர்ந்து
வருகின்றன. நாள்தோறும் புதுபுது சாதனையாளர்களை பாட்மிட்டன் பெற்று
வருகிறது. சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் அளவுக்கு நாம்
முன்னேறிவிட்டோம்.மற்ற விளையாட்டுகளில் என்னை பிரமிக்க வாய்த்த சில
வெற்றிகள்

-ஒலிம்பிக் துடுப்புவலித்தல் பிரிவில் நான்காம் இடம் பெற்ற சர்வான் சிங்க்
- தரவரிசையில் இல்லாத நிலையில் பாட்மிட்டன் இரண்டாம் நிலை சீன
வீராங்கனையை வீழ்த்திய பள்ளிமாணவி p .v. சிந்து

- ஸ்குவாஷ் விளையாட்டில் வெற்றி வாகை சூடி வரும் இந்திய பெண்கள் அணி
(தீபிக பல்லிகள் ,சக்கரவர்த்தி ,அபராஜிதா ,அனகா அலங்காமணி )

- தொடர் ஓட்டத்தில் அசதி வரும் பெண்கள் அணி என பல்வேறு வீரர்
வீராங்கனைகள் சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள். போதிய பயிற்சியும்
மக்களின் கரகோஷமும் இருந்தால் இவர்களால் இந்தியாவின் பெருமைகளை உலகறிய
செய்ய முடியும்

விளையாட்டு வீரர்களுக்கு அரசால் கிடைக்கும் அங்கீகாரங்களில் கூட அரசியல்
விளையாடுகிறது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை சச்சின்
டெண்டுல்கருக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.சச்சினின்
தனிப்பட்ட சாதனையால் இந்தியாவுக்கு பெருமை என்றாலும் 10 நாடுகள் மட்டும்
ஆடும் விளையாட்டில் சாதித்தது எப்படி உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை
தேடி தரும் .

ஒலிம்பிக்கில் தன் தலைமையில் மூன்று முறை பதக்கம் பெற்று தந்தவர் ,
பதக்கம் வென்ற அணியில் 5 முறை இடம்பெற்றிருந்தவர் ,அதற்கும் மேலாய்
இராணுவத்திலும் பணிபுரிந்தவர் இப்படி பல சிறப்புகளை பெற்ற சர் மேஜர்
தயான் சந்த் அவருக்கு தான் முதலில் பாரத  ரத்னா வழங்க வேண்டும். பின்னர்
உலக அளவில் இந்தியாவின் பெயரை பதிவு செய்த லியான்டர் பயஸ் , விஸ்வநாதன்
ஆனந்த் ,சுஷில் குமார் என பெரிய பட்டியலே இருக்கிறது. இப்படி வழங்கினால்
தான் விருதின் மாண்பு காப்பற்றப்படும்.ஒலிம்பிக் என்பதையே உலக அரசியலின் விளையாட்டு களமாகவே எனக்கு தெரிகிறது
வளர்ந்த நாடுகள் தங்களுக்கு மட்டுமே தெரிந்த தங்களின் பாரம்பரிய
விளையாட்டுகளை திணித்து விட்டனர். ஆசிய கண்டத்திலிருந்து ஜூடோ மற்றும்
தேக்வண்டே ஆகிய இரு பாரம்பரிய விளையாட்டுகளே இருக்கின்றன. ஐரோப்பிய
நாடுகளால் அறிமுகபடுத்தப்பட்ட சில விளையாட்டுகள் மிக கடினமாகவே உள்ளன.
உதரணமாக modern penathlon எடுத்து கொண்டால் அதில் நம் வீர்ர்கள் பங்கு
பெறவே இன்னும் 10 ஆண்டுகள் பிடிக்கும்.அதற்க்கு தேவையான  வசதிகள்
நம்மிடம் இல்லை. இந்தியா ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்குவாஸ் .கபடி
மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இல்லாதது நம்
துரதிஷ்டமே.

ஆக பல சோதனை கற்களை கடந்து ஒலிம்பிக்கில் சாதிக்கும் நம் வீரர்களை நாம்
பாரதியே தீர வேண்டும். உங்கள் உற்றார், உறவினர்கள் விளையாட்டுகளில்
ஆர்வம் காட்டினால் அவர்களை தயவு செய்து உற்சாகபடுத்துங்கள். உங்களின்
ஒவ்வொரு கைதட்டலும் அவர்களுக்கு சாதிக்க வேண்டும் எனும் உத்வேகத்தை
அதிகபடுத்தும்


நன்றி வணக்கம்

பி.கு

நான் சச்சினுக்கோ கிரிக்கெட்டுக்கோ எதிரி இல்லை .நானும் ஒரு கிரிக்கெட்
ரசிகன்தான்.மேஜர் தயான் சந்த்  என்ற பெயரை கேட்டாலே ஒரு இனம் புரியாத
சிலிர்ப்பு வருகிறது. உலகிற்கே ஹாக்கியை கற்று தந்தவருக்கு தான் முதலில்
பாரத  ரத்னா வழங்க வேண்டும். அவரின் சாதனைகள் முறையான பதிவுகள்
இல்லாததால் நமக்கு தெரியாமல் போய்விட்டன. இன்றைய நவீன சமூகம் தயான் சந்த்
ஆடியதை field hockey (கள ஆக்கி) என்று சொல்கிறது .அதை நான் ஒப்புகொள்ள
மாட்டேன். அன்று நாங்கள் ஆடியது தான் ஹாக்கி இன்று நீங்கள் எல்லோரும்
ஆடுவதை புல்தரை ஹாக்கி என்று வைத்து கொள்ளுங்களேன்.
சச்சினை god  of cricket  என்று சொல்கிறார்கள் (அப்போ பிராட்மன் ?) நான்
தயான் சந்த் அவர்களை அப்படி கூற மாட்டேன். அவர்தான் ஹாக்கி ,hockeythaan
அவர்

இன்னும் பல வீரர்களை பற்றி எழுத ஆசைதான் ஆனால்  பதிவின் நீளம் கருதி எழுத
முடியவில்லை


இவை என் சொந்த கருத்துகள் தான் . யாரையும் உயர்வாகவோ தாழ்வாகவோ
கூறவேண்டும் என்று இது எழுதப்படவில்லை. என் கருத்துகள் யார் மனதையாவது
புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும.

No comments:

Post a Comment