திரு. கௌதம நீலாம்பரன் அவர்கள் எழுதிய கோச்சடையான் நாவல் படித்தேன். கல்கி
,சாண்டில்யன் முதலியோரின் தாக்கத்துடன் வரலாற்று நாவல் படிக்க போகிறோம்
என்ற எதிர்பார்ப்புடனும் படிக்க அமர்ந்த எனக்கு மிக பெரிய ஏமாற்றமே
காத்திருந்தது இயற்கை மற்றும் இதர வர்ணனைகள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண
நாவல் படிப்பது போன்ற உணர்வே இருந்தது.
தன் தந்தை புலிகேசியை வெற்றி கொண்டு வாதாபி நகரை நரசிம்மவர்ம பல்லவர் அழித்தால் (படிக்க : சிவகாமியின் சபதம்) அவர்கள பழிவாங்க பெரும் படையுடன் புறப்பட்டு வரும் விக்கிரமாதித்தனை பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை
பல்லவர்களின் தலைநகரை விக்கிரமாதித்தன் முற்றுகை இட பரமேஸ்வர பல்லவர் தன் மக்களுடன் தப்பி செல்கிறார். நாடோடி பெண் வேடமிட்டு செல்லும் இளவரசி மோகன தேவியை சாளுக்கியர்கள் கவர்ந்து செல்கிறார்கள்.உறையூரில் விக்கிரமதித்தனுடன் பேச்சு வார்த்தை நடத்த செல்லும் கோச்சடையான் அவளை அடையாளம் கண்டு கொண்டு தப்பிக்க வைக்க முயலுகிறான். தப்பி செல்லும் அவளை மீண்டும் கைது செய்து சிறையில் வைக்கிறான் சாளுக்கியன் .
கோச்சடையான் நெஞ்மேலிக்கோட்டை திரும்பும் சமயம் பல்லவ இளவல் ராஜசிம்மன் வர இருவருக்கும் இடையில் நட்பு மலருகிறது. பின் தன் தந்திரத்தால் மோகன தேவியை சிறை மீட்கிறான். வரம்பு மீறி பேசும் சாளுக்கிய சேனாதிபதி கைது செய்யப்படுகிறான். பின் thappum அவன் மோகனவுடன் தனியாக செல்லும் கோச்சடையனை தாக்க முயல ஆபத்துதவி படைவீரர்களால் தாக்கப்பட்டு தப்பி ஓடுகிறான் இந்நிலையில் எதிரிகளால் காயமுற்று மயக்கமுறும் பல்லவ மன்னர் பரமேஸ்வர பல்லவரை கருவூர் கோவிந்த வல்லபர் மகள் ரங்கபதாகை அங்கு தாங்கும் அவர் தன் நாட்டை பாண்டியர் உதவியுடன் மீட்க எண்ணுகிறார்
கோச்சடையான் மதுரையில் உள்ள சமயம் பார்த்து நென்மெலிகோட்டையை முற்றுகையிட்ட சிறு படையை ரகசிய வழியில் உள்ளே நுழையும் கோச்சடையன் உள்ளே இருந்தும் அவர் தந்தை மாறவர்மர் அரிகேசரி நெடுமாறன் மறுபக்கமும் தாக்கி தோற்கடிக்கிரர்கள்
ஆனால் உறையூரில் தங்கியுள்ள சமுத்திரம் போன்ற பெரும் படையை அவர்கள் எவ்வாறு முறியடிக்கிறார்கள் என்பதே கதையின் முடிவு
வர்ணனைகள் அதிகம் இல்லாவிட்டாலும் கதையின் போக்கு நன்றாகவே உள்ளது
கோச்சடையான் மிக சிறந்த வீரராகவும் மிக சிறந்த ராஜதந்திரியாகவும் வியக்க வைக்கிறார் திரைசீலை ஓவியத்தை கண்டு பல்லவ ராணியை மணக்க நினைப்பதும் தன் ரதம் ஒட்டி வென்ற வைர மாலையை அவளுக்கு பரிசளிப்பதும் அருமை
பதுமகோமளை எனும் பெயரில் நாடோடி பெண்ணாக கோச்சடையானை தவறாக எண்ணி அவர் மீது கத்தி வீசுவதும் பின் காதல் கொள்வதுமாக வருகிறார்
தன்னை காப்பாற்றிய பல்லவ இளவல் ராஜசிம்மனை அவர் யார் என தெரியாமலே ரங்கபதாகை அவர் மீது காதல் கொள்கிறாள்
மோகனா தேவியை பற்றிய வர்ணனையில் அவள் இளவரசி என்பதாலேயே அழகாக தானே இருக்க வேண்டும் என்ற கூற்று அருமை
மொத்தத்தில் ஒரு புதுவகையான அனுபவத்தை கொடுத்து சில நிமிடங்களிலேயே முடிவுற்றது
கோச்சடையான் என்ற பெயரே பெரிய பிரமலமாகி விட்டதால் கூடுதலாக எழுத எண்ணினாலும் ஒன்றும் எழுத முடியவில்லை
மேலும் அதிக தகவல்களை சொன்னால் படிக்கும் அல்லது படமாக பார்க்கும் பொழுது ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தினாலும் இத்தோடு முடிக்கிறேன்
நன்றி வணக்கம்
வாழ்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!

No comments:
Post a Comment