கடந்த
சில நாட்களாக சாண்டில்யனின் மற்றுமொரு அறிய படைப்பான யவன ராணி படித்தேன்.
அப்பப்பா ! அன்னம் ,தண்ணீர் மற்றும் ஆகாரம் என எல்லாவற்றையும் மறக்க
வைத்து தன்பால் ஈர்த்துகொண்டாள் யவன ராணி.
அரசியல் சதுரங்கத்தில் சோழர்களை வேரறுக்க பாக்கும் சேர, பாண்டிய மற்றும் வேளிர்கள் ,மன்னரை கொலை செய்து அரியணையை கைப்பற்றும் துரோகி ,யவன நாட்டில் இருந்து தமிழகத்தை ஆள எண்ணி வரும் படை இவ்வற்றை முறியடித்து தமிழகத்தை காக்கும் ஒரு வீரனின் கதை. இனி கதைக்கு வருவோம்.
கதையின் நாயகனாக படையின் உபதலைவன் இளஞ்செழியன் தன் காதலி பூவழகியுடன் ஏற்பட்ட ஊடலால் கடலோரம் நடந்து வர அங்கு யவன ராணி கரை ஒதுங்கி மயக்க நிலையில் கிடக்கிறாள். அவள் வந்த மரக்கலம் தீப்பற்றியதால் நீந்தி கரை ஒதுங்கியவளை தன மாளிகைக்கு அழைத்து செல்கிறான். அவளால் பெரிய பிரச்சனை வரும் என தன் சேவகன் ஹிப்பாலஸ் கூறியதை சில கணத்தில் உணர்கிறான். தன் நாட்டை கைப்பற்ற வந்திருக்கும் ராணியை பணயக்கைதியாக்கி யவன படைத்தலைவன் டைபீரியஸ் இடமிருந்து தப்புகிறான். இதனிடையே ராணி தமிழகத்தில் கால் வைத்தவுடன் சோழ புல்லுருவி இருங்கோவேள் மன்னன் இளஞ்சேட்சென்னியை கொன்று இளவல் திருமாவளவனை கைது செய்து தான் மன்னனாகிறான். அவனே புகரை யாவனற்கு அளிக்கிறான்.ராணியை சிறை செய்தது போல் துறவியும் ராஜதந்திரியுமான பிரம்மனந்தர் குடிலுக்கு அழைத்து செல்ல அங்கு வரும் டைபேரியாஸ் அவளை மீட்டு செல்கிறான் .
மாறு வேடத்தில் தப்ப முயலும் பிரம்மனந்தர் ,ஹிப்பாலஸ் ,பூவழகி மற்றும் அவள் தோழி இன்ப வள்ளி ஆகியோரை சிறை செய்கிறான் டைபேரியாஸ். இளஞ்செழியன் மட்டும் தப்பி ராணியை மீண்டும் சிறை எடுத்து அதன் பேரில் மற்ற அனைவரையும் யவன படைதலைவனிடமிருந்து மீட்கிறான்.பின் ராணியுடன் கருவூர் சமண அடிகளிடம் திருமாவளவன் மாமன் இரும்பிடர்தலையரை சந்திக்க செல்கிறான் அங்கு இருங்கோவேள் வர பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. திருமாவளவனை கொள்ள தீயிடுகிறார்கள். அதிலிருந்து தீப்புண்களோடு தப்பும் அவருக்கு பூவழகி அடைக்கலம் தர அவளை இளவல் தன் சகோதரியாக பாவிக்கிறார்(காலில் ஏற்பட்ட தீக்காயம் காலை கருப்பாக்கிவிட பூவழகியல் கரிகாலன் என பெயர் பெறுகிறார் வளவன் இனி நாமும் அவரை கரிகாலன் என்றே அழைப்போம் )அங்கு யாவனர்களால் உருவாக்கப்பட்ட புத்தர் சிலை மர்மத்தை அறிய முயலும் ராணியும் இளஞ்செழியனும் சந்தர்ப்பதால் உறையூர் செல்ல அங்கு டைபெரிஅச் அவர்களுடன் இணைகிறான் . இந்த சூழ்நிலைகளில் ராணி செழியன் மீது கொண்டுள்ள காதல் வலுவடைகிறது.
பின் வஞ்சத்தால் இருவரையும் பிரிக்கும் டைபேரியாஸ் இளஞ்செழியனுக்கு விஷம் கொடுத்து யவன நாடு செல்லும் கப்பலில் அனுப்பி விடுகிறான். அந்த விஷத்தில் இருந்து தப்புதல் , பின் கடல் சுறாக்கள் இடமிருந்து தப்புதல் என தப்பி கடைசியில் அடிமை வணிகனிடம் மாட்டி இறுதியில் கடற்கொள்ளையர்களிடம் சிக்குகிறான். அவர்களை வஞ்சித்து சாம்ப்ராணி தீவின் கொடுங்கோல் மூர்க்கன் இலி -ஆஜூவிடம் சிக்க வைக்கிறான். பின் தன் தந்திரத்தால் அவனிடமிருந்து அவன் மகள் அலீமா உதவியால் தப்புகிறான் . அவள் மூலம் பொன், பொருள் மற்றும் பல மரக்கலங்கள் சம்பாதித்து தமிழகம் திரும்புகிறான். இந்த சமயங்களில் பூம்புகாரில் ரகசிய படைதிரட்டும் கரிகாலனும் அவன் மாமனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் கலைத்து விட்டு காட்டுக்குள் மறைந்து கொண்டு படை திரட்டுகிறார்கள். அதோடு ஆறு மாத காலம் இருங்கோவேளால் சிறைபட்ட பூவழகியை தன் காதலி அல்லி உதவியால் மீட்கிறார் கரிகாலன். பூம்புகார் யவனர் வசமிருந்த இக்காலங்களில் மதில்களையும் படைகளையும் செவ்வென தயார் செய்கிறார் டைபேரியாஸ் .பல காலம் கழித்து தமிழகம் திரும்பும் செழியன் யவனன் போல் அனைவரையும் ஏமாற்றுகிறான். பின்பு வெண்ணி செருக்களத்தில் kariகாலரோடு சேர்ந்து இருங்கோவேள்,சேர,பாண்டிய மற்றும் வேளிர் பெரும்படையை தன் சிறந்த வியுகங்களால் முறியடிக்கிறான் பின் எவ்வாறு டைபீரியாசை வீழ்த்துகிறான்? யவன ராணி ,பூவழகி யாரை கைப்பிடிக்கிறான் என்பதே யவன ராணியின் முடிவு
சிறந்த வீரன் ,அறிவாளியாக ரதப்பந்தயங்களில் அசைக்க முடியாதவன் என அனைவரும் கொண்டாடும் மனிதனாக இளஞ்செழியன் .பூவழகியுடன் ஊடல் கொள்வதிலும் யவன ராணியுடனான காதலால் தடுமாறுவதும் அருமை . கடலில் அவன் செல்லும் அசாத்திய சாதனைகளும் அவன் தந்திரங்களும் பிரம்மிக்க வைக்கின்றன
தன் மாமன் மகனுடன் ஊடலும் காதலும் கொண்டு பின் ஏங்குவதுமாக வருகிறார் பூவழகி.
கதையின் முக்கிய அங்கமான யவன ராணி தன் குருமார்கள் கணிப்பு படி அரசாள வேண்டும் என வருகிறாள் பின் முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு யவனர்கள் தோற்றாலும் பரவாஇல்லை தன் காதலன் வெல்ல வேண்டுமென நினைத்து உதவி புரிகிறார்கள்.கடைசியில் அவள் முடிவு ஆச்சர்யம்
துறவியான பின் தன் ராஜதந்திரத்தால் கதையின் ஓட்டத்தை தீர்மானிக்கிறார் பிரம்மனந்தர்.அவரது சீடரான சமண அடிகள் பாத்திரம் அருமை
பிரம்மனந்தர் ஆல் பயிற்றுவிக்கப்பட்டு பின் நாளில் சோழ ராணியாகும் அல்லி ,நாகையில் இளஞ்செழியன் படைதிரட்ட உதவும் அவன் வளர்ப்பு தாய் காத்தயீ செழியனின் உப தலைவர்களான குமரன் சென்னி ,பரத வல்லாளன் என பலர் கடையை நகர்த்த உதவுகிறார்கள்
கடற்போரில் கடல் கொள்ளையர்களில் அக்கிரமங்கள் பயங்கரம் மூர்க்கன் இலி -ஆஜு வை பற்றி படிக்கும் பொது குலை நடுங்குகிறது .தன் படையில் சரிபாதி உள்ள யவன வீரர்கள் தன் இனம் அழிந்தாலும் தன தலைவன் வெல்ல வேண்டும் என நினைப்பது சிறப்பு
யவன ராணியின் வர்ணனை அவளை தேவலோக பதுமையாக ஒரு தேவதையாக என்ன வைக்கின்றன. யவனர்களின் பொறியியல் நுட்பம் என்னை வியக்க வைத்தது.
புத்தர் சிலையில் உள்ள ஆயுத கிடங்கு மற்றும் சுரங்கம்
இந்திரா விழ மண்டபத்தில் இருந்த இரு பெரும் நகரும் தூண்கள்
என அவர்களின் நுண்ணறிவு பிரம்மிக்க வைக்கிறது
மொத்தத்தில் யவன ராணி என்ற காவியம் தமிழர்களையும் அவர்தம் போர்களையையும் உலகிற்கு உணர்த்தும் காலத்தால் வெல்ல முடியாத படைப்பு

யவண ராணியின் பெயரை மட்டும் கடைசி வரை ஆசிரியர் குறிப்பிடவில்லை பெயர் தெரிந்தால் கூறவும்
ReplyDeleteகடைசியில் கண் கலங்க வைத்து விட்டார் யவண ராணி