October 08, 2013

மகுட நிலா புத்தகம் பற்றிய பேச்சு

மகுட நிலா


திரு.மு .மேத்தா அவர்கள் எழுதிய மகுட நிலா என்ற வரலாற்று புதினம் படித்தேன் சோழர் குலம் வீழ்ச்சியுற்று நாடில்லாமல் அலைந்த சமயத்தில் வீரன் ஒருவன் தனிமனிதனாக படைதிரட்டி ஒரு அரசை நிறுவிய கதை. பிற்கால சோழர்கள் என்னும் பெயர் வரலாற்றில் இடம்பெற்று சோழ குலம்  மறுமலர்ச்சி அடைய காரணமாயிருந்த விஜயாலய சோழரின் கதை. இக்கதையின் நாயகர்கள் அவரும் அவர் மகன் ஆதித்தனுமே


தஞ்சையை முத்தரையர்களிடம் இருந்து கைப்பற்றிய பின் கொற்கை கோவில் கட்டி அதன் விழா கொண்டாட ஏற்பாடு செய்கிறார் விஜயாலயர். அதை குழைக்க முத்தரையர்கள் சதி செய்கிறார்கள். இளவல் ஆதித்தன் ஒற்றர் ஒருவரை விரட்டி செல்லும் பொது தாமரை என்ற போர்வீரன் மகளை கண்டு மையல் கொள்கிறான். பல்லவர்களுடன் சோழர்கள் நட்பு கொண்டாடுவதை எதிர்க்கிறான் இளவல். புதிய கோவிலின் மர்மத்தை அறிய விருந்தினராக வரும் பல்லவ இளவரசி சாருமதி தேவி சூழ்நிலையால் இளவரசனை வெறுக்கிறாள். இந்நிலையில் சோழர்க்கு அவப்பெயர் வழங்க வேண்டும் என்பதற்காக சாருவை சத்ரு பயங்கர முத்தரையன் கடத்தி செல்ல அவளை மீற்கிறான் ஆதித்தன்.இதனால் இளவரசி காதல் கொள்கிறாள். அரசியல் காரணங்களுக்காக மன்னர் தந்திரமாக இருவரையும் பிரிக்கிறார் .

// இடையில் மன்னர் தன் இளவயது போராட்டங்களை பற்றி பல்லவ இளவரசிக்கு விளக்குகிறார்.தனி ஒருவனாக ஊர் ஊராக சென்று படை திரட்டும் அவரை முத்தரையர் வீரர்கள் கொல்ல  முயல மரக்கல மன்னர் எனப்படும் வணிகரும் அவர் மனைவி பெருமனைகிழத்தியும் காப்பாற்றி உதவி புரிகிறார்கள். வள்ளி என்ற பெண்ணை மணந்து ஒரு போராளியாக வாழ்கிறார். தன மனைவி நோய்வாய்ப்பட்ட சமயத்தில் அருகில் இருக்க முடியாமல் தஞ்சையை கைப்பற்ற மகனுடன் செல்கிறார். தஞ்சை அவர்க்கு கிடைகிறது ஆனால்  அவர் மனைவியை இழக்கிறார்
//


பல்லவ மன்னர் நிருபதுங்கவர்மன் வாரிசு இல்லாததால் தன் தம்பி மகன் அபராஜிதரை  இளவரசனாக அறிவிக்கிறார் . ஆனால் பாண்டியர்கள் பேச்சை கேட்டு அவனை வெறுக்கிறார்.அபராஜிதன் விஜயாலயர் உதவியை நாட தன் ராஜதந்திரத்தால் நிருபதுங்கனை இறக்கி அபராஜிதனை மன்னனாக முடி சூட்டுகிறார். அபரஜிதரும் ஆதித்தனும் நெருங்கிய நண்பனாகிறான்.இந்நிலையில் விஜயலயர் நோய்வாய்ப்படுகிறார். ஆயினும் பாண்டியனுடன் போர் செய்ய எண்ணுகிறார். அபரஜிதணும் ஆதித்தனும் இணைந்து பாண்டியனுடன்(வருகுண பாண்டியன் ) போர் புரிகிறார்கள். முதலில் ஆதிக்கம் செலுத்திய சோழர் படை பின்வாங்க ஒரு கை கால் செயலிழந்த நிலையில் செருக்களம் செல்லும் விஜயலயர் வெற்றி கொடி  நாட்டுகிறார்.இந்நிலையில் சேரன் சூழ்ச்சி செய்து ஆதித்தனையும் அபராஜிதனையும் பகையாளியாக்குகிறான். இதனால் ஒரு பல்லவ சிறுபடை தஞ்சையை ஆக்கிரமிக்கிறது. இந்த செய்தியை கேட்டவுடன் உயிர் துறக்கிறார் மன்னர்.

பின் நடக்கும் போரில் யார் வெல்கிறார்கள் ? ஆதித்தன் சாருமதியை திருமணம் செய்கிறன?
போன்ற பல கேள்விகளுக்கு விடை அழிப்பது கடையின் முடிவு

(கதையின் முடிவை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை . மன்னிக்கவும்  மேத்தா சார் .கதை முற்று பெறாதது போல் உணர்ந்தேன் )

கதையின் நாயகராக தன் உடலில் 96 விழுப்புண் பட்ட மாவீரர். ஒரு போராளியாக தனி மரத்தை தோப்பாக்குகிறார்.அரண்மனையில் தன் வாழ்கையை குதிரையை வைத்து ஓவியமாய் வரைந்தது அருமை. தன் மனைவிக்கு உயிரோடிருந்த போது ஒரு முத்துமணி மாலை கூட வாங்கி தர முடியவில்லை என வருத்தப்பட்டு மன்னனான பின் தன் கிரீடத்தை அவள் பாதங்களின் பக்கத்தில் வைத்தது போல் ஓவியம் வரைந்திருப்பது அவர் மனைவி மேல் கொண்ட அன்பை காட்டுகிறது. மன்னரான பின்பும் அவரின் எளிய வாழ்க்கை அவர் புகழை மேலும் உயர்த்துகிறது. அபராஜிதனை அரியணை ஏற்றும் இவரது ராஜதந்திரம் அருமை.மாற்றான் படை ஆக்கிரமிப்பை பற்றி கேட்டவுடன் அவர் இறப்பது பெரிய சோகம் .

ஆதித்த சோழன் வீரனாக இருந்த போதிலும் அவன் செயல்கள் அவனை விரும்ப முடியாமல் செய்கின்றன. ஆதித்தன் -தாமரை காதல் காட்சிகள் அருமை.(ஆனால் தாமரையை பிரித்து என்னை வருத்தப்பட செய்தது .அதையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை )

சிறந்த வீரன் மற்றும் விவேகியாக அபராஜிதன். தன் பெரியப்பாவுக்கு எதிராக செயல்பட விரும்பாமல் ஒதுங்கினாலும் காலம் அவரை அவ்வாறு செய்ய வைக்கிறது . தான் முற்றுகை இட்டதால் விஜயலயரின் உயிர் பிரிந்து விட்டதை எண்ணி அவர் பாதத்தில் அமர்ந்து அழுவது மிகவும் உச்சகட்ட காட்சி.

அழகு ,அறிவு மற்றும் அரசியல் நுட்பம் நிறைந்த அழகு பதுமையாக சாருமதி தேவி .கடைசியில் அவர் எடுக்கும் சபதம் அருமை.

தன் பேரனுக்காக (அபராஜிதன் ) உயிர் விடும் கங்க மன்னர்,சோழ ஒற்றர் படை தலைவர் சாந்தன் பழியிலி, அமைச்சர் மாவிலிவாணர் ,உறையூர் சிற்றரசர் உத்தமசீலர் என பல கதாபாத்திரங்கள் கதையை கொண்டு செல்கின்றன .

முடிவை தவிர மற்ற அணைத்து பக்கங்களும் அருமை. பல எதிர்மறை முடிவுகளை நான் ஏற்று கொண்டிருக்கிறேன். ஆனால்  இதன் முடிவை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை

பல ஆச்சர்யங்கள் பொதிந்து கிடக்கும் இந்நூல் பிற்கால சோழர்கள் பற்றி அறியும் முன்னர் படிக்க  வேண்டிய அரிய படைப்பு




பி.கு

செருக்களம் - போர்க்களம்
மையல் -காதல்

No comments:

Post a Comment