October 08, 2013

சோழ நிலா - புத்தகம் பற்றிய பேச்சு

திரு மு.மேத்தா  அவர்கள் எழுதிய சோழ நிலா என்ற வரலாற்று புதினம் படித்தேன். இது ஒரு புதிய இனிய அனுபவத்தை கொடுத்தது . வழக்கமாக ஒருவரை கதாநாயகனாகவோ கதாநாயகியாகவோ கொண்டு அவரை மையமாக வைத்து கதையை நகர்த்தாமல் வரலாற்று சம்பவங்களின்  நகர்வில் கதை பயணித்தது புதுமையாக இருந்தது.பாண்டியர்களிடம் நிலவிய உள்நாட்டு குழப்பங்களை பயன்படுத்தி தமிழகத்தை ஆள நினைக்கும் சிங்களர்களை சோழர்கள் வேரறுக்கும் படலம் தான் சோழ நிலா (சிங்களர் மேல் எனக்குள்ள தனிப்பட்ட வன்மத்துக்கு இது ஆறுதல் அளித்தது )

இனி கதைக்கு வருவோம்
பாண்டிய மன்னர்களான குலசேகர பாண்டியனும் வீரபாண்டியனும் அரியணைக்காக சண்டையிடுகிறார்கள்.மழவசக்கரவர்த்தி மற்றும் கண்டதேவ மழவரையன் உதவியுடன்  குலசேகரன் அரியணை ஏற வீரபாண்டியன் சிங்கள உதவியை நாடுகிறான் சிங்கள மன்னன் பராக்கிரம பாகு இதை பயன்படுத்தி தமிழகத்தில் காலுன்றவும் சோழர்களை பழிதீர்க்கவும் எண்ணுகிறான். அவன் தன் தளபதிகளான இலங்காபுரி தண்டைநாயகனையும் ஜகத் விஜய தண்டைநாயகனையும் அனுப்ப அவர்கள் உதவியுடன் வீரபாண்டியன் அரியணையில் அமர்கிறான்

சோழ ராஜ்யத்தில் மன்னர் ராஜதிராஜனால் தன் கீழ் உள்ள சிற்றரசர்களை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இதில் கங்க நாட்டு சிற்றரசன் ஆகவமல்லன் வீரபண்டியரோடு சேர்ந்து கொள்கிறான் இந்த இக்கட்டான  சூழலில் சோழ நாடு முழுக்க சேனை நாயகரும் முதல் அமைச்சருமான நம்பி பல்லவரையரை நம்பியே இருக்கிறது. போர்த்திறனும் ராஜதந்திரமும் நிறைந்த வயது முதிர்ந்த அவர் சிறுவர்களான இளவரசர் குலோத்துங்கனையும் இளவரசி தியகவல்லியையும் வளர்த்து வருகிறார்


போரில் தோற்ற குலசேகரன் மீண்டும் படையெடுத்து தோற்கிறான். பின் அவன் சோழ உதவியை நாட பல்லவரையர் சில காரணங்களுக்காக போரை தாமத படுத்துகிறார். இதை புரிந்து கொண்ட ராஜதந்திரியான இலங்காபுரி சோழர்களை வென்றது போல் மாயை தோற்றுவிக்கிறான். அதை உடனே முறியடித்து விட்டு பாண்டியனுடன் செருக்களம் செல்கிறார் சேனை நாயகர்.பெரிய படையை கொண்ட சிங்களர் முன் சோழ படை தோல்வியை சந்திகிறது (அவர் தலைக்கு  இரண்டு ஊர்களை தருவதாக சொன்னதால் நண்பர்களே பகைவர்களாகி ) அவரை கைது செய்கிறார்கள்.அதற்குள் அவர் இறந்து விட்டார் என்ற வதந்தி ஊருக்குள் பரவி மக்களை கிடுகிடுக்க செய்கிறது.


அவர் எவ்வாறு சிறையில் இருந்து மீள்கிறார் ? மீண்டும் போர்க்களம் சென்று எவ்வாறு வெற்றி பெறுகிறார்?  என்பது தான் மீதி கதை.

என்னை கேட்டால்  சேனை நாயகர் தான் கதாநாயகன். அரசியல் ஆளுமை, ராஜதந்திரம், போர்த்திறன், பாசம் மிக்க தாத்தா என பிரமிக்க வைக்கிறார் . பல்லவரையரின் சீடன் என சொல்லி கொள்ளும் ஒற்றன் மானவர்மனின் வீர் தீர  செயல்கள்  அருமை. கடைசியில் அவர் யார் என்பது தெரியும் பொது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.

துரோகிகளுக்கு உதவி புரியும் ஆகவமல்லன் , வீரபாண்டியன் ,

சிறுவர்களாக குலோத்துங்கன் தியாகவல்லி ,

நாட்டியகாரியாக அறிமுகமாகி  நாட்டுபற்றால்  பல்லவரையருக்கு உதவி புரிந்து உயிர் விடும் மோகன சுந்தரி அவளது காதலன் இளந்தேவன்,

தியாகவல்லியை  காதல் செய்யும் பாண்டிய இளவரசன் விக்ரமன்,

என அனைவரும் இக்கதைக்கு உயிரூட்டுகிறார்கள்

போரில் வெற்றி பெற்ற பின் நேரடியாக குலசேகரருக்கு பட்டம் சூட்டாமல் யார் மன்னன் என்ற கேள்வியை மக்களிடமே விடுவது அருமை.

போர்கள காட்சிகள், வியூகங்கள் அனைத்தும் விவரிக்கபட்டிருக்கும் விதம் அருமை

கதையின் வேகம் , முடிச்சுகள் மற்றும் ஆச்சர்யங்கள் என கடைசி வரை ஓர் எதிர்பார்ப்பையும்  பரவசத்தையும் வழங்குகின்றது சோழ நிலா

No comments:

Post a Comment