ராஜ திலகம்
சென்ற வாரம் சாண்டில்யன் அவர்களின் மற்றொரு படைப்பான ராஜ திலகம் என்ற புதினத்தை வாசித்தேன். காஞ்சி கைலாசநாதர் கோயிலையும் மாமல்லபுரம் அரங்கன் கடற்கோயிலையும் சிருஷ்டித்த ராஜசிம்மன் (இரண்டாவது நரசிம்மன்) , தன் தந்தை புலிகேசியை கொன்று வாதாபியை அழித்த பல்லவர்களை பழி தீர்க்க வரும் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனை எவ்வாறு முறியடித்து ராஜ திலகம் பெறுகிறான் என்பதே இந்த கதை. கலையும் காதலும் பரவி நிற்கும் இந்த அற்புத காவியம் எனக்கு பேரு உவகையை கொடுத்தது .இனி கதைக்கு செல்வோம்
மல்லை (மாமல்லபுரம்) கடற்கரையில் மங்கையொருத்தி இயற்கை அழகை பருகிய வண்ணம் இருக்கிறாள். மைவிழி செல்வி எனும் பேர் கொண்ட அந்த பதுமை ஒற்றர் தலைவர் இந்திரவர்மரின் மகள். அவள் மல்லையில் ஆலய திருப்பணியில் ஈடுபட்டுள்ள பல்லவ இளவல் ராஜசிம்மன் மீது மையல் கொள்கிறார்கள். அந்த இனிமையை கலைக்க வருகிறது சாளுக்கிய படை .சாளுக்கியரின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்திருந்தாலும் காஞ்சியின் கலை பொக்கிஷம் காப்பாற்ற பட வேண்டும் என்பதற்காக காஞ்சியை சாளுக்கியர்களை தாரை வார்த்து விட்டு காட்டில் மறைந்து வாழ்கிறார் மன்னர் பரமேசுவரவர்மன். மல்லையில் உள்ள இளவலை கைது செய்ய வரும் சாளுக்கிய உபதளபதி வீரபாகுவிடம் இருந்து தப்புகிறார்கள் இளவல் ,இளவலின் சீன நண்பன் யாங் சின் மற்றும் மைவிழி. அவர்கள் ஆதிவரகவன் குகைக்கு செல்ல அங்கு எதிர்பாராத விதமாக அங்கு சாளுக்கிய அரசன் விக்க்கிரமாதிதனை பார்கிறார்கள்.இளவலின் வேடத்தை கண்டு கொண்டாலும் கைது செய்யாமல் போர்களத்தில் சந்திப்பதாக கூறி விடை பெறுகிறார் விக்க்கிரமாதிதன்.
அங்கிருந்து கடல் மார்க்கமாக காஞ்சி செல்ல முயலுகிறார்கள் வணிகர் வேடமணிந்து உடன் வீரபாகுவை பணயக்கைதியாக்கி கொண்டு காஞ்சிக்கு செல்கிறான்.இந்திரவர்மன் , தளபதி பலபத்ரவர்மன் ,மைவிழி மூவரையும் வணிக மாளிகையில் விட்டுவிட்டு தன் குரு ஆச்சார்யர் கண்டி மகாகவியின் வீட்டுக்கு செல்ல அங்கு அவர்களை வரவேற்கிறார் கங்க மன்னன் மகள் ரங்கபதாகா தேவி.அவள் சிற்ப அறிவில் சிறந்திருந்தாலும் ராஜசிற்பி இளவல் இடம் கற்று கொள்ள விரும்ப அவர்களுக்குள் காதல் அரும்புகிறது. அதற்குள் அங்கு வரும் சிறந்த ராஜதந்திரியும் போர் மற்றும் அமைதி மந்திரியுமான ஸ்ரீராம புண்யவல்லபர் இளவலை அவன் தந்தைக்கு கங்க மன்னனோடு போர் செய்ய வேண்டாம் என ஓலை எழுத சொல்ல அவன் மறுக்கிறான்.பின் தண்டி மகாகவியின் இல்லத்தில் உள்ள சுரங்க பாதை வழியாக தப்பி கடிகை செல்லும் அவர் அங்கும் புண்யவல்லபர் வந்து செய்கிறார். மகனையும் தந்தையையும் சேர விடாமல் அவர் பல சூழ்ச்சிகள் செய்கிறார்.கண்டி மகாகவியின் ராஜதந்திரமும் ராஜசிம்மனின் அறிவும் அதையெல்லாம் முறியடிக்கின்றன.காஞ்சியை கைப்பற்றினாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் முழு சுதந்திரம் தருகிறார் விக்கிரமாதித்தன் இதனால் மக்களுக்கு சாளுக்கியர்களை பிடிக்க ஆரம்பிக்கிறது.இளவல் பரமேசுவரனோடு சேரும் முன் கங்க போர் மூண்டு விட ஸ்ரீராம புன்யவல்லபரின் வியுகத்தால் கங்க மன்னன் வெல்கிறான். போரில் படுகாயமடையும் பரமேசுவரரை சந்திக்கும் இளவல் விளிந்தையில் வைத்து சீனன் தன் சிகிச்சையால் குணப்படுத்துகிறான். ரங்க பதாகை தன் திட்டத்தால் தன் தந்தையும் கங்க மன்னனுமான பூவிக்கிரமனை பின் வாங்க வைக்க போர் அதோடு முடிகிறது. பின் விளிந்தை நகரை பாசறையாக மாற்றுகிறான். விக்கிரமாதித்தன் தன் சாம்ராஜ்ய ஆசையில் போர் மந்திரியின் பேச்சை மீறி தெற்கே உறையூருக்கு படையெடுத்து செல்ல இளவல் தன் சீன நண்பனுடன் சேர்ந்து படை திரட்டி சாளுக்கிய தலைநகரான வாதாபியை முற்றுகை இடுகிறான் . அங்கு இளவல் வியூகத்தால் பல்லவர் படை விக்கிரமாதித்தன் மகன் வினயாதிதன் மற்றும் பேரன் விஜயாதித்தன் படையை தோற்கடிக்கிறது. பின் தன் தந்தை படையுடன் இணைந்து உறையூர் நோக்கி செல்லும் முன் தூதுவனாக தனியாக அங்கு செல்லும் ராஜசிம்மனை வரவேற்கும் சாளுக்கிய மன்னர் பின் முன்பு கூறியது போல் தனியாக வாள்போர் புரிகிறார். அதில் வென்று பாண்டிய நாடு செல்ல முயல அங்கு வரும் பாண்டிய இளவல் ரணதீரன் (கோச்சடையான்) உடனும் வாள்போர் புரிகிறான் இந்த யுத்தத்தில் ரணதீரன் பங்கு பெற கூடாது என்ற நிபந்தனையுடன் . அதிலும் வெல்கிறான் . இறுதியில் இரு படையும் பெருவள நல்லூரில் சந்திக்கின்றன.
தன் படையை விட பெரிய சாளுக்கிய - பாண்டிய படையை எப்படி தோற்கடிக்கிறார் என்பதே கதையின் முடிவு
தன் தந்தையை வென்று வாதாபி நகரை அழித்த பல்லவரை பழி தீர்க்க வரும் விக்கிரமாதித்தன் காஞ்சியை அழிக்காமல் காத்தான் என வரலாறு கூறுவதே பல்லவருக்கு மிக பெரிய அசிங்கம் என கூறுவது அருமை.
அணைத்து கதாபாத்திரங்களையும் நல்லவர்களாகவே காட்டி கதையை நன்றாகவே நகர்த்தி இருக்கிறார் சாண்டில்யன் .
ராஜசிற்பி ,சிறந்த ராஜதந்திரி, போர் வீரர் என பலவற்றிலும் சிறந்து விளங்குகிறார் ராஜசிம்மன். இரு பெண்களுடன் காதல் கொள்ளும் காட்சிகளிலும் போர் வியூகங்களை வகுப்பதிலும் என பல் துறை வல்லுனராக விளங்குகிறார். ஒற்றன் மகளான மைவிழி சவுக்கு தோப்பில் இலவளோடு தனித்து இருக்கும் காட்சிகள்,கடலில் இலவளோடு நீந்தும் காட்சிகள் என காதல் ரசம் சொட்டும் இடங்கள் ஏராளம். கதை முழுக்க காதலோடு கூடவே வருகிறார் மைவிழி. முதலில் மைவிழியுடன் சினம் கொண்டாலும் பின் நல்ல தோழியாகவும் சிறந்த மதி கொண்ட பெண்ணாகவும் இளவலை போற்றுகிறார்கள் பெண்கள் இருவரும்.
சிறந்த ராஜ தந்திரிகலான புண்யவல்லபரும் தண்டி மகாகவியும் தங்களின் சதுரங்க கைகளை போல் மற்ற எல்லோரையும் பயன்படுத்துவது மிக வியப்பு
கலைக்காக நாட்டை தாரை வார்த்து கடைசி வரை வாய்மை காகவே வாழ்கிறார் மன்னர் பரமேசுவரர் சீன அக்குபஞ்சர் வைத்தியத்தால் மன்னரை குணப்படுத்தும் யாங் சின் சீன அரசு பரம்பரையை சேர்ந்து இருந்தாலும் கலை பற்று காரணமாக இளவலுக்கு அடிமையாக வாழ்வது சீனர்களின் கலை பற்றை புலப்படுத்துகிறது
ஆனாலும் தான் வெல்லும் நாடுகளின் செல்வதையும் மக்களையும் நாசப்படுத்தும் பண்பாடற்ற சீன போர் முறையை விட நம் போர் தர்மம் பெருமைப்பட வைக்கிறது. வாதாபி போரில் தோற்றாலும் சிறுவன் விஜயாதிதன் வீரத்தை கண்டு வியக்கும் இளவல் தனக்கும் இப்படி ஒரு மகன் பிறக்க வேண்டுமென நினைப்பது அருமை .
காதலர்கள் பேசும் இடங்களில் காவ்யாதர்சம் , ரகுவம்சம் போன்ற காவியங்களை மையப்படுத்துவது சிறப்பு
போர் வியுகங்கள் , போர் காட்சிகள் வர்ணிக்கப்பட்டிருக்கும் விதம் அருமை
பி.கு :
சம காலத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் இரு புதினங்கள் சற்று முரண்படுவது இயற்கை. ஆனால் இதற்கும் கௌதம நீலாம்பரனின் கொச்சடையானுக்கும் அதிக muranpaadu உள்ளது . கோச்சடையான் பல்லவ இலவளோடு சேர்ந்து சாளுக்கியரை தோற்கடித்தான் என நீலாம்பரன் சொல்லுகிறார்.ஆனால் இதில் கோச்சடையான் போரில் ஈடு படவே இல்லை என சாண்டில்யன் சொல்லுகிறார்

No comments:
Post a Comment