October 07, 2013

வேங்கையின் மைந்தன் - புத்தகம் பற்றிய பேச்சு

என் சிறு பிராயம் முதலே நான் படிக்க ஆசைப்பட்ட புத்தகம் வேங்கையின் மைந்தன் .
அகிலனின் படைப்பான இது  சாஹித்ய அகாடமி விருது பெற்றது. ஒரு வழியாக பெரும் போராட்டத்துக்குப் பின் இப்போது தான் படித்து முடித்தேன்

வேங்கையின் மைந்தன் கதை ராஜேந்திர சோழரை பற்றியதாக இருக்கும் என்ற என் கணிப்பு சரியானது. ராஜராஜரை  தவிர வேறு யாரை வேங்கை என்று சொல்ல முடியும் (நான் அருள்மொழி  வர்மனை தான் சொல்கிறேன் !!!!!). கதையின் பயணமானது ராஜேந்திரர் அரசராக முடி சூட்டி கொள்ளும் சமயம் ஆரம்பிகிறது. அப்போது அவருக்கு வயது 48. ஆகவே அவரது காதல் அனுபவங்களை சொல்ல முடிய வில்லை என முன்னுரையிலே அகிலன் ஆதங்கப்படுகிறார். (ராஜேந்திரர் அதிகப்படியான போர்களை  இளவரசராகவே  செய்திருக்கிறார் )

இனி கதைக்கு வருவோம். கதையின் நாயகனாக கொடும்பாளூர் இளவல் இளங்கோ வருகிறார். இலங்கையில் சிக்கியுள்ள பாண்டியர்களின் மணிமுடியை மீற்க ஏற்கனவே மூன்று முறை சோழர்கள் படையெடுத்தும் முடியவில்லை. நான்காவது முறையாக ராஜேந்திரர் தலைமையில் ஒரு பெரும் படை செல்கிறது. போர் செய்ய முடியாமல் மகிந்தர் ஒளிந்து கொள்ள ரோகனம் சோழர்கள் வசம் வருகிறது. ரோகன இளவரசியான ரோகினி இளங்கோவின் மேல் வெறுப்பை உமிழ்ந்தாலும்  ஒரு சமயத்தில் இளங்கோவின் உயிரை காத்ததோடு மணிமுடியை கண்டுபிடிக்கவும்  உதவ இளங்கோ காதல் கொள்கிறான். ராஜேந்திரர் மகள் அருள் மொழி ஏற்கனவே இளங்கோவை விரும்புகிறாள்.மணிமுடியை கைப்பற்றினாலும்  ரோகன அமைச்சர் கீர்த்தி மகிந்தரின் சிறு வயது மகனுடன் சேர்ந்து மறைந்து கொள்கிறார்

வெற்றி களிப்புடன் ராஜேந்திரர் படை சோழ நாடு கிளம்புகிறது. பின்பு பாண்டியர்களுடன் உள்நாட்டு போர் மற்றும் சாளுக்கியர்களை  முறியடிக்கிறது சோழ படை. ராஜேந்திரர் தன மகன் சுந்தர சோழனை மதுரையின் அரசன முடி சூட்டாமல் மணி முடியே அரசன் என்று அறிவிக்கிறார். ராஜேந்திரர் தன புதிய தலைநகரான சோழபுரத்தை உருவாக்குகிறார் பின்பு கங்கை வரை சென்ற சோழர் படை புனித நீர் கொண்டு திருப்பணிகளை முடிக்கிறது.அமைச்சர் கீர்த்தி பாண்டியர்களுடன் சேர்ந்து இதை அழிக்க  பார்க்கிறார். அவரால் அழிக்க முடிந்ததா ? இளங்கோ ரோகன இளவரசியை திருமணம் செய்தனா? என்பது தான் கதையின் முடிவு


ராஜேந்திரர் சில போர்களில் கண்மூடித்தனமான செயல்களில் ஈடுபட்டார் என சில வரலாற்று ஆசிரியர்கள் சொன்னாலும் மன்னராக பொறுப்பேற்ற பின் ஒரு சிறந்த மன்னனாக செங்கோல் செலுத்துகிறார். சோழபுரத்தில் உள்ள கோபுரம் தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தி விட சிறிதாக இருக்க வேண்டும் என உத்தரவிடுகிறார் இதி இருந்தே அவர் தன தந்தை மேலே கொண்டுள்ள பக்தி நமக்கு புலனாகிறது.

இளங்கோ போர்களில் வீரத்தை காட்டுவதிலும் இரு பெண்கள் அன்பிடம் சிக்கி தடுமருவதுமாக இருக்கிறார். ரோகினி இளங்கோவை விரும்பவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் தடுமாறுகிறார்

சாமந்த நாயகராக வந்திய தேவர் , கொடும்பாளூர்  பெரிய வேளாளர் , அரையர் ராஜராஜன் ,
முத்தரையர்கள் , இலவரசர்கலான சுந்தர சோழன்  மற்றும் ராஜாதிராஜன் என பலர் பெரிய சோழ அரசுக்கு உதவியாக இருக்கிறார்கள்

இளங்கோவின் நண்பனாக அறிமுகமாகி பின் பகைவனாகும் வீர்மல்லன் , மாங்குடி மாறன் ,திலகவதி என பல கதா பாத்திரங்கள் கதைக்கு அழகு சேர்கின்றன



என்னை வியக்க வைத்தவை

எதிர்காலம் குறித்த ராஜேந்திரரின் தொலைநோக்கு பார்வை, எதிரிகளிடம் கூட அன்பு செலுத்தும் குணம் என என் கண்களுக்கு ராஜேந்திரர் மிக பெரிதாக வியக்க வைக்கிறார்.போர்கள், ஆட்சிமுறை,நீதி மற்றும் ஆலய திருப்பணிகள் என அனைத்திலுமே
தந்தையை பின்பற்றுகிறார். அழகு , புத்திசாலிதனம் நிறைந்த பெண்ணாக விளங்குகிறார் அருள் மொழி. ஈழ தீவின் அழகை அவர் வர்ணித்திருக்கும் விதம் அருமை



வியப்பின் உச்சிக்கு என்னை கொண்டு சென்றது தண்ணீருக்கு அடியில் அமைக்கப்பட்ட
சுரங்கபாதை தான்

எப்படியாவது ஒரு முறை கங்கை கொண்ட சோழபுரம் சென்று வர வேண்டும் என்ற ஆவலை அகிலன் விதைத்து விட்டார்

இன்னும் ஒரு மாதம்  இந்த தாக்கம் என்னுள்ளே உலாவி கொண்டிருக்கும்

நன்றி வணக்கம் 

No comments:

Post a Comment