October 06, 2013

தமிழன் உலகின் முன்னோடி -பகுதி 1



இந்த பூவுலகிற்கு கல்வி ,கலை ,பண்பாடு,கலாச்சாரம் மற்றும் பல அரிய பொக்கிசங்களை அளித்த சமுதாயங்களுள் தமிழ் சமுதாயமும் முக்கியமானதாகும் அதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள்

"கல் தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றிய மூத்த குடி"

என்று கூறினார்களோ?.
தமிழர்களின் பழக்கவழக்கங்களும் கண்டுபிடிப்புகளும் உலகிற்கு பல அரிய படைப்புகளை தந்திருக்கின்றன.முறையான பதிவுகள் இல்லாததாலும் தங்கள் படைப்புகளை பிறர் மீது திணிக்க விரும்பாததாலும் நமது பெருமைகள் உலகிற்கு தெரியாமலே போய்விட்டன.இவற்றில் சிலவற்றை பற்றி கூறலாம் என்பதன் விளைவே இந்த பதிவு

நீர்பொருள்களின் சுருங்கா இயல்பை பாஸ்கல்(pascal) என்ற விஞ்ஞானி கண்டறிந்தார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்துக்கு முன் வாழ்ந்த ஔவையார் தம் பாடலில் இவ்வாறு கூறுகிறார்

"ஆழஅமுக்கி முகக்கினினும் ஆழ்கடல்
நீர்நாழி முகவாது நாள்நாழி"
(அடி பிறழ்ந்து இருந்தால் மன்னிக்கவும்)
இதன் பொருள் எவ்வளவு முக்கி எடுத்தாலும் அதன் அளவு ஒன்றே .நீர்பொருள்களை சுருக்கி எடுக்க முடியாது என்று கூறுகிறார்.

அம்மை நோய்க்கு மருந்து கண்டறியும் முன்னரே தமிழர்கள் வேப்பிலை என்ற கிருமிநாசினியை கொண்டு அம்மையை விரட்டி அடித்தார்கள்.
குடியாட்சியின் மகத்துவத்தை அன்றே ராஜராஜ சோழர் partial ஆக அமல்படுத்தி மிக சிறந்த உள்ளாட்சி அமைப்பை உருவாக்கி இருந்தார்.நாடு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு மக்களால் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆளுநர்கள் அவற்றை நிர்வகிப்பது போன்ற ஒரு முறையை உண்டாக்கி இருந்தார். ஆக மக்களாட்சியின் தர்மத்தை உலகிற்கு கற்றுதந்தவர்கள் நாம்.

மேலும் ராஜராஜர் நில அளவை (land measure) முதன் முதலில் அறிமுகபடுத்தி அதற்கு தகுந்தாற்போல் வரி வசூல் செய்தாராம்.

கப்பல்கள் (மரக்கலங்கள்) நிறுவுவதில் அதிக நிபுணத்துவம் பெற்ற தமிழர்கள் அதன் முகத்தை கழுகு ,சர்ப்பம் ,புறா ,புலி போன்ற பல்வேறு வடிவங்களில் நிர்மாணித்தார்கள். கடலில் ஏற்படும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் நுணுக்கங்களையும் தமிழர்கள் அறிந்து செயலாற்றி இருந்தனர்

இந்த உலகிற்கு தற்காப்பு கலை என்ற ஒன்றை நாம் தானே கற்று கொடுத்தோம்

பெண்விடுதலை என்ற சொல்லை செயல்படுத்தியவர்கள்  தமிழர்கள். நாடு போற்றிய நல்ல அரசியாக திகழ்ந்த வீரத்தாய் வேலுநாய்ச்சியார் இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் வித்து என்பதில் நமக்கு பெருமைதானே!!!.அவர் உருவாக்கிய உடையாள் என்ற பெண் இராணுவமே உலகின் முதல் பெண்கள்  இராணுவமாகும்.உலகின் முதல் தற்கொலைப்படை தாக்குதலை  (human bomb ) குயிலி என்ற பெண் மூலமாக பதிவு செய்தவரும் அவரே.

புவியின் காந்த புலத்தால் (magnetic pole ) மூளையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் வடக்கு -தெற்காக படுக்க கூடாது என்று சொன்னவரும் எம்முன்னோரே

தனக்கு உதவிய கால்நடைகளை தெய்வமாக பூஜித்த பண்பாடு மிக்க சமுதாயம் எம்சமுதாயம் என்றென்னும் பொது இறுமாப்பு கொள்வது இயல்புதானே

பி.கு

உலக வரலாற்றில் (இந்திய வரலாற்றில் கூட ) மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட நமது பக்கங்களில் சில வற்றையவது மீட்டு எடுக்கும் முயற்சிதான் இந்த பதிவு
தனி மரம் தோப்பாகாது ஆதலால் உங்கள் அனைவரின் பங்களிப்பும் அவசியம். இது சமந்தமான உங்கள் பதிவுகளை இதன் பின்னூட்டமாகவோ அல்லது தனியாகவோ பதிவு செய்யுங்கள். நம் சிறப்புகளை கடுகளவேனும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.


[அடுத்த பதிவில் கட்டிடகலை மற்றும் போர்களில் நமது பங்களிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளை பற்றி பேசுவோம் சில வாரங்களுக்கு பிறகு ]


மூலங்கள் (sources )
- தமிழக கல்வெட்டுகள் என்ற புத்தகம் (ஆசிரியர் பெயர் மறந்து விட்டது )
-திரு. சாண்டில்யன் அவர்கள் எழுதிய கடல் புறா என்னும் புதினம்
-முகர்ஜி என்பவர் எழுதிய India shipping என்ற மொழிபெயர்ப்பு நூல் (அதன் மூலம் போயர் எழுதிய கல்பதரு எனும் படைப்பு )
-ராஜராஜர் வரலாறு பற்றி தினமணி நாளிதழ் வெளியிட்டிருந்த ஒரு கட்டுரை
-http://en.wikipedia...
-http://en.wikipedia...
-மற்றும் சில செவிவழி செய்திகள்

No comments:

Post a Comment