October 18, 2013

பேறுகாலம்



 


சிப்பியின் வயிற்றுக்குள் சின்னதொரு மாற்றம் கண்டு
கருவறையில் நான் காத்த களஞ்சியமே......

என் மூச்சில் சுவாசித்த என்னருமை கண்மணியே.....

ஐயிரண்டு திங்கள் மசக்கையாய் நானிருந்து
வெஞ்சோத்தை விடுத்து சாம்பலை உணவாக்கி
மாம்பிஞ்சு புளிப்பினிலே பூ பூத்த தேன்கனியே........
 
என்னுள்ளே உருவாகி அசைவுகளால் மகிழ்வித்த                                                                                                                       உன்னை நீயக்கா என்னை தாயாக்கிய தூதுவனே......


பிரசவ வலியோ இனிமையான வேதனைதான்
கண்ணீரில் அழுகாமல் சிரிப்பாளே அழுதேனே......



என் இதயத்தில் நான் வரைந்த ஓவியமே.........

உன்னை உருவாக்க என்னை சுவராக்கினேன்
பால்குடத்தில் நான்பெற்ற என்இனியபாலகனே.......


உந்தன் முதல் அழுகை எனக்கு
நூறுகோடி இன்பங்கள் தான்
தொப்புள்கொடி அறுந்தாலும் என்சூட்டில் உயிர்வாழும்
என்அழகு காவியமே இணைஇல்லா கலையழகே..........



உன் கன்னாக்குழியின் சிரிப்பில் இங்கு
என் கண்ணீர்கள் மறைந்ததடி.......

நீ கண்மூடி துயில்கையிலே எந்தன்
கனவுகளை காணுகிறேன்
உன் கைவிரல் தீண்டல்களில் என்
பிறவி பயணடைந்தென். 

1 comment: