உலகம் உண்டான காலத்தில் இருந்தே மண்ணாசை ,பெண்ணாசை ,பொன்னாசை என பல
பெயர்களை சொல்லி சண்டைகள் ஆரம்பித்தன. மனிதர்கள் தங்களை காத்துக்கொள்ள
உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் அவர்களையே அழித்துகொள்ள
பயன்படுத்தப்பட்டன.மனிதனின் பரிணாமம் வளர்ந்து பக்குவப்பட்டாலும் அந்த போர்
உணர்ச்சி மட்டும் மாறவே இல்லை அன்று அதிகாரத்தில் இருந்தவர்களின்
அதிகாரபோதை எனும் மாயை பல உயிர்களை தின்றது .இன்றும் தின்று கொண்டுதான்
இருக்கிறது .அன்றைய போர்கள் மனிதனை மட்டுமே அழித்தன .இன்றைய போர்கள்
மனிதனோடு சேர்த்து இந்த உலகையே அழிக்கின்றன. அறிவியல் முன்னேற்றம் மனிதனை
அமைதியை நோக்கி சிந்திக்க விடாமல் நவீன ஆயுதங்களை நோக்கி சிந்திக்க வைத்தது
விசித்திரமானது .கத்தியும் வாட்களும் போய் துப்பாக்கிகளும் பீரங்கிகளும்
பேசி கொண்டன.இன்றைய நவீன ஆயுதங்கள் உலகை புல் பூண்டு கூட இல்லாமல்
அழிக்கும் அளவுக்கும் வந்து விட்டன.
வளர்ந்த நாடுகள் ஆண்டுதோறும் ராணுவம் மற்றும் ஆயுதங்களுக்கு மிக பெரிய அளவில் செலவுகள் செய்கின்றன. அந்த செலவினங்களில் 2% மட்டும் தந்தால் ஏழ்மை நிலையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளின் பஞ்சம் பட்டினி முதலியவை நீங்கும்.ஆனால் அவ்வாறு செய்ய அவர்கள் தயாராக இல்லை. தங்கள் படை பலத்தை பெருக்கி உலகுக்கு காட்டி பெருமையடித்து கொள்ளும் அவர்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு ,மனித வளம் போன்றவற்றில் பொறுப்புணர்ச்சிகளை தட்டி கழிக்கின்றன. உலக வெப்பமயமாதலை தடுக்க சில மின்னணு சாதனங்களின் உபயோகத்தை கட்டுப்படுத்த அவர்கள் விரும்பாமல் தங்கள் கழிவுகளை பிற நாடுகள் மீது திணிக்கின்றன.வளர்ந்த நாடுகளின் இந்த செய்கையால் மற்ற நாடுகளும் தங்கள் அடிப்படை பிரச்சனைகளின் தீர்க்க மறந்து ராணுவத்தை பலபடுத்த விரும்புகின்றது துரதிஷ்டவசமானது.
சில சமயங்களில் இந்த ஆயுதங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்களுக்கு எதிராக பிரயோகிக்க படுகின்றன .அதிகார போதை இந்த அரசுகளின் கண்ணை கட்டி தம் சொந்த மக்கள் மீதே அடக்குமுறையை ஏவி விடுகின்றன . உலக போர்களின் போது வெற்றிக்காக மக்கள் மற்றும் சுற்றுசூழலை பற்றி சிந்திக்காமல் சில நாடுகள் இரசாயன ஆயுதங்கள் உபயோகப்படுத்தின .நேரடியாக ஆயுதத்தால் கொல்லாமல் நோய்களை பரப்பி மக்களின் உயிர்களை வருத்தி அவர்களை கொன்றுகுவித்தனர். டைனமைட் மற்றும் அணுகுண்டுகள் போர்களை அடுத்த கட்டதுக்கு எடுத்து சென்றன.
மற்ற ஆயுதங்களை மிஞ்சி எமனிடம் மொத்த குத்தகைக்கு மனித உயிர்களை எடுத்த ஏஜெண்டுகள் போல் அணு ஆயுதங்கள் திகழ்கின்றன .[அணு ஆயுதத்தை கண்டறிந்த விஞ்ஞானி அதன் விளைவுகளால் வருந்தி மன நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ]. அனுகுண்டின் கோரத்தை ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் நமக்கு காட்டுகின்றன .
வளர்ந்த நாடுகள் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என கூறினாலும் நாளை அவை பயன்படுத்தப்படுமாயின் பெரிய சேதம் விளையும். சிரியா மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் உலக சமுதாயத்துக்கு விரோதமாக யுரேனியத்தை செறிவூட்டி ஆயுதங்கள் தயாரித்து வருவது கவலைக்குரியது. அவர்கள் இதை தற்காப்பு என அவர்கள் கூறிகொண்டாலும் அவை பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது .ஒருவேளை இந்த ஆயுதங்கள் தீவிரவாத குழுக்களிடம் கிடைத்தால் மனித சமுதாயம் பல்வேறு தாக்குதல்களை எதிர் கொள்ளவேண்டி வரும். மின்சாரம் முதலிய தேவைகளுக்காக நாம் நாடும் அணு உலைகள் ஒரு பெரிய விபரீதத்தை தமக்குள் வைத்திருகின்றன. இயற்கை சீற்றங்கள் ,தாக்குதல்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு போன்றவற்றின் காரணமாக எழும் கதிர்வீச்சுகள் கணப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்து விடும் (செர்நோபில் அணு உலை சீற்றத்தின் விளைவுகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது அல்லவா )
ஆயுதம் என்பது physical object ஆக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை .மக்களிடம் தூண்டி விடப்படும் வன்மம் எனும் ஆயுதம் பலபேரை அழித்துவிட கூடியது .மத தீவிரவாதம் எனும் ஆயுதம் தினந்தோறும் பல உயிர்களை குடித்து கொண்டுதான் இருக்கிறது. உலகில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் ஒன்றான மனிதன் தன்னை அழித்து கொள்வதோடு தன்னை படைத்த இயற்கையையும் அழித்தது தர்மமாகுமா ??.
ஒருவரையொருவர் வீழ்த்தி வாழும் வாழ்க்கை நிச்சயம் திருப்தியை தராது. சமாதானத்துக்காக உலகில் அனுதினமும் பலர் பாடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் . மக்களிடம் சாதி ,மத இனத்தை அப்பாற்பட்ட ஒரு ஒற்றுமை வேண்டும். சாதி ,மத பெயர்களை சொல்லி கொண்டு அழிக்காமல் இறைவன் ஒருவனே (நாத்திகர்கள் இறைவன் என்பதை இயற்கை என கொள்க ) என்ற பக்குவம் அடைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
ஒவ்வொரு நாடுகளும் புதுப்புது ஆயுதங்கள் தயாரிப்பதையும் இராணுவத்தை பெருக்குவதையும் தடுக்கும் பொருட்டு உத்வேகத்துடன் செயல்பட கூடிய ஒரு சமாதான அமைப்பு தேவை. வளர்ந்த நாடுகள் மட்டும் ஆதிக்கம் செலுத்தாமல் அதன் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் .அணு ஆயுதம், இரசாயன ஆயுதம் போன்றவற்றை அந்த அமைப்பின் மேற்பார்வையில் ஒழிக்க வேண்டும். இதனால் புதிய ஆயுதங்கள் உருவாவதையும் ஏவுகணை சோதனைகளையும் தடுக்கலாம்.
மேலும் சமாதான அமைப்பு மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் சர்வாதிகார நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் . உள் நாட்டில் நடக்கும் கலகங்கள் ,இன அழிப்பு முதலிய வன்செயல்களை இந்த அமைப்பு தடுக்கும்
இதன் மூலம் உலகம் என்பது ஒரே குடியின் கீழ் ஒன்று படும்.மத வேறுபாடு அழிந்தால் நிச்சயம் ஒற்றுமை ஏற்படும் .மக்களின் அன்பு,அறன் ,சகோதரத்துவம் மேலோங்க மக்கள் அமைதியாக வாழ்வார்கள். நடக்குமா என தெரியாது நடந்தால் நன்றாக இருக்கும்
(பாதை நீளும் )
பி.கு :
இந்த பதிvu எந்த நாட்டையும் மக்களையும் உயர்வாகவோ தாழ்வாகவோ சித்தரிக்க எழுதப்படவில்லை
நன்றி வணக்கம்
அடுத்த பதிவில் சந்திப்போம்

No comments:
Post a Comment