December 01, 2016
வானொலி
"வானொலி கேட்கும் நேரம்
நம் வாழ்வின் உன்னத நேரம் "
அண்மையில் ஹலோ எப்.எம்ல டைரினு ஒரு நிகழ்ச்சி கேட்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் ரேடியோ கேட்டதுல அந்த நிகழ்ச்சி ரொம்ப புடிச்சு இருந்துச்சு . மேலும் பால்ய காலத்தில் வானொலி கேட்ட அனுபவங்களை அசை போட தூண்டிவிட்டது. அதன் விளைவே இந்த பதிவு
துல்லியமாக எந்த வயதில் இருந்து வானொலி கேட்க ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. அப்பொழுது அதிகம் கேட்கும் அலைவரிசைகள் சென்னை , திருச்சிராப்பள்ளி மற்றும் சிலோன் போன்றவை தான். செய்திகள் , திரை இசைப் பாடல்கள் , சிறார் பல்சுவை நிகழ்ச்சிகள் , நாடகங்கள் மற்றும் ஒலிச்சித்திரங்கள் என பல நிகழ்ச்சிகள் கேட்டு மகிழ்ந்த நினைவு.
மதிய உணவு வீட்டில் 1.45 மணி செய்திகளுடன் முடிய இரவு உணவு 7.15 மணி செய்திகளுடன் ஆரம்பிக்கும். ஆல் இந்தியா ரேடியோ , ஆகாஸவாணி என இரு வேறு செய்திப் பிரிவுகள் இருந்தன.
வாரயிறுதி நாட்களில் ஒலிபரப்பாகும் ஒலிச் சித்திரங்கள் ( திரைப்படம்) மிகவும் பிடித்தமானவை. சிவகாமியின் சபதம் முழு நாவலை வாராவாரம் ஒலிச் சித்திரமாக கேட்டு முடித்தேன்.
பிறகு பண்பலை வானொலிகள் வர ஆரம்பித்தவுடன் வானொலி என்பது எல்லா நேரத்திலும் கேட்க கூடிய ஒன்றானது. நெசவு உள்ளிட்ட தொழில் செய்பவர்களுடன் பன்பலைகள் முழு நேர அங்கமாகின.
எங்க ஊர் சைடுல கொடைக்கானல் எப்.எம் மட்டும்தான் தெளிவா எடுக்கும் . சூரியன் எப்.எம்க்கு அவ்வளவு தெளிவா சமிக்ஞைகள் கிடைக்காது.
இன்னிக்கு வரை எத்தனையோ பண்பலைகள் கேட்டாலும் எனக்கு எப்பவுமே கோடை எப்.எம் மட்டும்தான் பேவரெட். அப்போ காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒலிபரப்பை கொடுத்து வந்தது.
வானவில் , சந்தோஷ சாரல் , சிந்தனை கட்டங்கள் , Knock out damaka , செப்புக செந்தமிழ், குறிஞ்சித் தென்றல், தொட்டு தொட்டு என நிகழ்ச்சிகள் ஏராளம். நேயர்கள் கடிதங்களுக்காகவே இரண்டு மணி நேரம் ஒதுக்கும் அளவுக்கு 22 மாவட்டங்களில் தன் இன்னிசை ஆதிக்கத்தை பரவி இருந்தது .
நேயர்களின் எண்ணங்களுடன் வண்ணம் பெறும் வானவில் நிகழ்ச்சி முக்கியமானது. அப்போது நிலைய இயக்குனராக இருந்த மகாசோமாஸ் கந்தமூர்த்தி ஐயா அவர்கள் ஒருங்கிணைக்கும் வானவில் மிகவும் ரம்மியமானது.
சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் வழங்கிய மீனாட்சி விலாசம் குடுப்பத் தொடரை விடாமல் கேட்டதுண்டு. பாகவதர், பழமொழி பாக்கியத்தம்மாள் என அனைத்து கதாப்பாத்திரங்களும் இன்றும் மனசில் நிற்கின்றன.
ஆங்கில கலப்பு இல்லாமல் சில விதிமுறைகளுடன் வலம் வரும் செப்புக செந்தமிழ், உண்டு களைத்தவுடன் 2 மணிக்கு துள்ளல் இசைப் பாடல்களுடன் வரும் நாக்அவுட் டமாக்கா, விளம்பரதாரர் நிகழ்ச்சியாக நவசதீஷ்குமார் வழங்கும் டாப் 5 சாங்ஸ் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் பசுமையாக இனிய நினைவுகளுடன் பதிந்துள்ளன.
வானொலி வரலாற்றில் குறுக்கெழுத்துப் புதிரை ஒலிபரப்பிய பெருமை கோடைப் பண்பலைக்கு மட்டுமே உண்டு. சிந்தனைக் கட்டங்கள் என்ற பெயரில் ஒலிபரப்பான அந்த நிகழ்ச்சிதான் பிற்காலத்தில் நான் சில தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்கள் உருவாக்க உத்வேகமாக இருந்தது.
Tone Tunes என்ற பெயரில் வலம் வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் முக்கியமானது.
பின்னர் இரவு பத்து மணி வரை ஒலிபரப்பை நீட்டித்து தற்போது 24 மணி நேரமும் ஒலிபரப்பாகி வருகிறதென நினைக்கிறேன்.
ஜான் டீ பிரிட்டோ , சித்ரா.எஸ்.ரவி என சில தொகுப்பாளர்களின் பெயர்தான் நினைவில் உள்ளது.
பாட்டு போடுற ஒரு சாதாரண எப்.எம் என கோடைப் பண்பலையை என்னால் நினைக்க முடியவில்லை. அதை தாண்டிய ஒரு பிணைப்பு இருப்பதாகவே கருதுகிறேன்.
#Kodai_FM #100.5
August 16, 2016
புதுக்கோட்டை சுற்றுப்பயணம்
வாழை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து எங்காவது சுற்றுலா செல்லவேண்டும் என்பது நீண்ட நாள் பேச்சாகவே இருந்துவந்தது . ஒருவழியாக நண்பர் மணிவண்ணன் அதற்கு செயல் வடிவம் கொடுக்க முன் வந்தார் . தன் சொந்த ஊரான புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல இடங்களை சுற்றி பார்க்கலாம் என்ற யோசனையை அனைவரும் ஏற்றோம்
சுற்றுலா செல்ல ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளை முடிவு செய்திருந்தோம் . நீளமான வாரயிறுதி என்பதால் கடும் போக்குவரத்து நெரிசலை தாண்டி நார்த்தாமலை சென்று சேர்ந்தோம் . அதற்குள் பெங்களுருவில் இருந்து இதர நண்பர்கள் வந்து பயணத்தை தொடங்க காத்திருந்தனர்
சுற்றிலும் அழகிய பாறைகளும் சிறு சிறு நீராதாரங்களும் நிரம்பிய நார்த்தாமலை எங்களை வரவேற்று அணைத்து கொண்டது . பாசி படர்ந்த அழகிய குட்டைகளில் அகமகிழ்ந்து
நீராடி ஓடோடி விளையாடினோம் . காலை சிற்றுண்டிக்கு பிறகு நார்த்தாமலை எற ஆரம்பித்தோம் . கண்ணுக்கெட்டிய தூரத்தில் புறப்பட்ட மலை நடக்க நடக்க தூரம் போய்க்கொண்டிருந்தது .
நார்த்தாமலையில் அமைந்திருந்த குடைவரை கோவில் எங்களை பெருமளவில் ஈர்த்தது . பல்லவர்கள் ,பாண்டியர்கள் , சோழர்கள் , முத்தரையர்கள் மற்றும் நாயக்கர்கள் ஆண்ட பகுதியென மண்ணின் மைந்தர் மணி எங்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டே வந்தார் . சோழர் கால கல்வெட்டுகள் சிலவற்றையும் பார்க்க முடிந்தது . பதினெண்பூமி விண்ணகரம் மற்றும் திருமேற்கோவில் என அவ்விடம் அழைக்கப்படுவதாக அறிய முடிந்தது .
அடுத்ததாக நான் ஆர்வமுடன் எதிர்நோக்கி இருந்த சித்தன்னவாசல் நோக்கி புறப்பட்டோம் . அழகிய சித்தன்னவாசல் ஓவியங்கள் குறித்து எங்களுக்கு வழிகாட்டியாய் அங்கிருந்த தொல்பொருள் துறை ஊழியர் உதவினார் .
அழகிய வண்ண சித்திரங்களில் இதயத்தை தொலைத்துவிட்டு அவரின் நேர்த்தியான விவரிப்பை கேட்டு மகிழ்ந்தோம் . அன்னப்பறவைகள் ,தர்மரை மலரின் பருவ நிலைகள் , அழகிய குளம் ஒன்றில் பூவினங்கள் புள்ளினங்கள் மாந்தர்கள் என பல்லுயிர் ஓம்பும் ஓவியம் என சிலாகித்து மகிழ்ந்தோம் .. இந்த ஓவியங்களில் குழந்தை பருவம் , இல்லறம் , துறவறம் மற்றும் சமாதி ஆகிய நிலைகள் மறை பொருளாக உணர்த்தப்படுவதாக ஐயா கூறினார் .
அங்கே ஒரு அறையில் எழுப்பப்பட்ட ஒலி கற்களால் கிரகித்து கொள்ளப்பட்டு மற்றும் எதிரொலிக்கப்படும் விந்தையை கண்டு சொல்லற்று நின்றோம் . 1.5 Km நீளமுள்ள பாறையில் அந்த இடத்தை மட்டும் கண்டுபிடித்து உருவாக்கிய நுட்பத்தை எண்ணி சிலாகித்தோம்.
அடுத்து சமணர் படுகைகள் உள்ள இடத்துக்கு கொஞ்சம் மலையேற வேண்டி இருந்தது நண்பகல் வெயிலில் . அங்கொன்றும் இங்கொன்றுமாக 17 படுகைகள் இருந்தன . சமணர்கள் அங்கு வாழ்ந்ததற்கு அவை ஆதாரம் . மக்கள் அங்கு சென்றுள்ளனர் என்பதற்கு பல கிறுக்கல்களும் இதயத்தை துளைக்கும் அம்புகளும் ஆதாரங்களாக விளங்கின . பாறையின் நிழலில் படுகைகளை பக்கத்தில் கண்களை மூடி கிடந்த தருணங்கள் இனிமையானவை .
குடுமியான் மலை செல்லும் வழியில் சிறிய சாரல் மழை பொழிந்து எங்கள் பயணத்தை வளப்படுத்தியது . குடுமியான்மலையில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட அர்த்த மண்டபத்தில் பல்வேறு வகையான சிற்பங்களை பார்க்க முடிந்தது . அங்கு எங்களை கட்டி போட்டது இரண்டு விடயங்கள் தான் . முதலாவது தேனிசை கல்வெட்டு . தேனிசை என்றதும் ஆச்சர்யபட வேண்டாம் .அது இசை குறிப்புகள் அடங்கியுள்ள கல்வெட்டுதான் ஆனால் அதை எப்பொழுதும் பாதுகாப்பது தேனீக்கள் என்பதனால் அந்த பெயர் . மனிதன் பாதுகாத்திருந்தால் கூட சேதம் ஏற்பட்டிருக்கலாம் . இரண்டு முதல் ஏழு தேன்கூடுகள் அமைந்து எப்பொழுதும் ஒரு முரணாகவே அமைந்திருக்குமாம் .
அடுத்து நடு மலைப்பகுதியில் காணப்பட்ட நாயன்மார்களின் சிற்பங்கள் தான் . இதிலென்ன சிறப்பு என்கிறீர்களா ? . மலையின் நடுப்பகுதி யாருமே செல்ல இயலாவண்ணம் செங்குத்தாக அமைந்திருந்தது அதில் எவ்வாறு இத்தகைய சிற்பங்களை அமைத்தார்கள் என தெரியவில்லை
இறுதியாக கொடும்பாளூர் சென்றோம் .பூதி விக்கிரமகேசரி கட்டிய ஒரு கற்றளியை கண்டோம் . அகழ்வாராய்ச்சியின் போது கண்டறியப்பட்ட அந்த இடத்தில ஒரு நிலைக்கிணறு இருந்தது . மேலும் மகாமண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் ஆகிய சேதம் அடைந்திருந்தன.
இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்த இனிய நாள் இத்துடன் முடிந்துவிடவில்லை என்பதை நண்பர் மணி வீட்டுக்கு சென்றவுடன் உணர முடிந்தது . தங்கைகள் , தம்பிகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கூடி எங்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தது மறக்க முடியாத அனுபவம் . பிறகு மொட்டைமாடியில் அனைவரும் அமர்ந்து நிலாச்சோறு உண்டோம் . பெரிய வாழை இலையில் ஆடும் மீனும் விளையாட அதனோடு சேர்ந்து நாங்கள் உறவாடினோம் .
தெவிட்ட தெவிட்ட இன்பம் கொடுத்த முதல் நாள் இனிதே நிறைவு பெற்றது

Subscribe to:
Posts (Atom)