October 06, 2013

காதல்


விடைகள் இல்லாத வினாக்களுக்கு
பதில் தேடும் இன்பம் -காதல்
முடியாமல் நீளும் பயணங்களில்
தொடரும் தேடல்கள்-காதல்
உண்மையை தேடும் பொய்களின்
உத்தம போராட்டம் -காதல்
இரு மனங்கள் பிணைவதில்
உணரும் வலி- காதல்
நிரந்தரமில்லா வாழ்வில் என்றென்றும்
வாழும் கனவுகள் -காதல்
விடியலை தேடும் மனதின்
பூரண நம்பிக்கை -காதல்

No comments:

Post a Comment