ஜல்லிக்கட்டு பற்றிய எனது புரிதல்களை விரிவான ஒரு பதிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்து வந்தது . அதற்கான காலம் இப்பொழுதுதான் வாய்த்திருக்கிறது .
ஜல்லிக்கட்டு வேண்டும் என மெரினா ,அலங்காநல்லூர் மற்றும் அனைத்து தமிழக பகுதிகளிலும் நடந்த போராட்டங்கள் மிக பெரிய வெற்றியையே தந்துள்ளன . கடைசி நாளில் சில வேண்டத்தகாத சம்பவங்கள் நடந்தாலும் இந்த போராட்டம் நிச்சயமாக வரலாற்று சிறப்புமிக்கது . எந்த ஒரு தலைமையும் இல்லாமல் , ஒத்த கருத்துக்களோ சித்தாந்தங்களோ இல்லாத பல தரப்பட்ட மக்கள் ஒரே போராட்டக்களத்தில் இணைவதே சரித்திரம் தான் . அதை தாண்டி அரசுக்கோ பாமர மக்களுக்கோ அல்லது சுற்றுசூழலுக்கோ எந்தவித சேதமும் சிதைவும் இன்றி இளைஞர் கூட்டம் போராடியது ஒட்டு மொத்த தேசத்துக்கும் ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.
இதுவரை போராட்டம் என்பதை கேலிக்கூத்தாக பார்த்த பலதரப்பட்ட மக்கள் தெருவில் இறங்கி போராடியது நிச்சயம் வரவேற்கத்தக்கது . இவ்வளவு பெரிய கூட்டம் கூடிவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக நோக்கத்தை (ஜல்லிக்கட்டு ) விடுத்தது பலதரப்பட்ட கோரிக்கைகளை எழுப்பியதில் எனக்கு உடன்பாடு இல்லை . அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புரிதல்களை அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஈழம் தொடங்கி விவசாயிகளின் தற்கொலை வரை பலதரப்பட்ட கருத்துக்களை பேசியதில் தவறில்லை என்றே கருதுகிறேன் . ஆனால் அவை இந்த இனிய தொடக்கத்தில் நாம் எதை நோக்கி போகிறோம் என்ற கண்ணோட்டத்தை மாற்றிவிட கூடாது
முதலில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்க வேண்டும் என்பதில் நாம் யாருக்கும் மாற்று கருத்து இல்லை . ஆனால் ஜல்லிக்கட்டு ஏன் வேண்டும் என்ற கேள்விக்கான பதில் ஒவ்வொருவரிடமும் வேறுபடுகிறது .
ஜல்லிக்கட்டு எனது கலாச்சாரம் என்ற முழக்கங்களை கேட்கும் போது எனக்கு தோன்றுவது இதுதான் . கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியென பெருமைப்படும் எமது மண்ணின் கலாச்சாரம் ஜல்லிக்கட்டு மட்டும்தானா ?. ஏர் உழுதல் என்ற நிலையை டிராக்டர்கள் வந்து நீக்கிவிட்டு பிறகு ஏறு தழுவுதல் நிச்சயம் வேண்டும் என்று சொல்வது எனக்கு முரண்பாடாகவே தெரிகிறது .என்னுடைய கலாச்சாரத்தையும் பண்பட்ட பழக்கவழக்கங்களையும் கால ஓட்டத்துக்கு தகுந்தவாறு நான் மாற்றிக்கொண்டு வந்துள்ள போது ஜல்லிக்கட்டு மட்டும் எதனால் விதிவிலக்கு என்ற கேள்வி எழுகிறது .
ஆக எனது கலாச்சாரமோ பழக்கவழக்கமோ அதை மாற்றி கொள்வதும் தொடர்ந்து கடைப்பிடிப்பதும் எனது விருப்பம் . அதை நானே விடுப்பது சரி ஆனால் யாரோ ஒருவர் அதை சிதைப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாடே கோபமாக பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்திருப்பதாக கருதுகிறேன்
அடுத்து ஜல்லிக்கட்டு இருப்பதால் விவசாயிகள் பயன்பெறுவர் என்ற கருத்துக்களில் எனக்கு எள்ளளவும் உடன்பாடு இல்லை . பொதுவாக ஜல்லிக்கட்டுக்கென தயார் செய்யப்படும் காளைகளை மற்ற பயன்பாடுகளுக்கு உபயோகிப்பதில்லை . மேலும் அவற்றை வளர்த்து பராமரிக்க ஆகும் செலவை ஈடு கட்டுவது கடினம் . மண்ணையும் மழையையும் நம்பி மட்டுமே பிழைப்பு நடத்தும் விவசாயிகள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் அளவுக்கு செல்வந்தர்கள் இல்லை .
விவசாயிகள் என்ற போது பெயரில் உள்ள பலதரப்பட்ட வர்க்கங்களை அடையாளம் காணுவது முக்கியம் . பல நூறு ஏக்கர்களை (நில உச்ச வரம்பு சட்டம் ?!?) கொண்ட பெரு மற்றும் சிறு ஜமீன்தார்கள் அல்லது நிலக்கிழார்கள் , சொந்த நன்செய் நிலத்தில் விவசாயம் செய்ப்பவர்கள், புஞ்செய் நிலங்களில் மழையையும் பருவ காலங்களை நம்பி பயிரிடுவார்கள் , தன் சொந்த நிலம் இல்லாவிட்டாலும் குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்பவர்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் என பலதரப்பட்ட வர்க்கங்களை உள்ளடக்கியது விவசாயம் என்னும் சொல் .
எனது கிராமம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது . அதன் சுற்று வட்டார கிராமங்களுடன் சேர்த்து காளைகள் வளர்க்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் . பொதுவாக ஜமீன்தார்கள் , பெரு நில முதலாளிகளே தங்களின் சமூக அல்லது வர்க்க கௌரவமாக காளைகளை அதிக அளவில் வளர்க்கிறார்கள் . சதவிகித அடிப்படையில் அன்றாடம் நிலத்தில் இறங்கி பாடுபடும் விவசாயிகள் வளர்க்கும் காளைகள் குறைந்த அளவிலானவையே . அப்படி இருக்க ஜல்லிக்கட்டினால் விவசாயிகள் மேன்மை அடைவார்கள் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது
இதையெல்லாம் தாண்டி நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்க காரணம் . காளைகள் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டு வீட்டு விலங்குகள் ஆகிவிட்டன (சட்டம் வனவிலங்குன்னு சொல்லும் விலங்கே இல்லைன்னு கூட சொல்லும் ). பொதுவாக வீட்டு விலங்குகளை வளர்க்க காரணம் அவற்றின் பயன்பாடுகள் மனிதனுக்கு தேவைப்பட்ட காரணம் தான் . எந்த விவசாயியும் நாயை காவலுக்காக வளர்க்காமல் அழகுக்காக மட்டும் வளர்ப்பதில்லை .
தற்காலத்தில் நாட்டு பசுவினங்களுக்கு பதிலாக அதிகம் பால் தர கூடிய ஜெர்சி போன்ற மேலை நாட்டு அல்லது கலப்பு இனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன . மேலும் காளைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சினை பிடிப்பது என்பது இயற்கையான சேர்ப்பாக அல்லாமல் சினை ஊசி என்ற நிலை வெகுவாக அனைத்து இடங்களிலும் நிலவுகிறது . இவ்வாறாக காளைகளின் பயன்பாடு என்பது குறைந்து ஒரு கட்டத்தில் முழுக்க அற்று போய்விடுகிறது . இப்பொழுது சொல்லுங்கள் நான் எனக்கு எந்த வகையிலும் பயன் தராத வீட்டு விலங்கை ஏன் வளர்க்க வேண்டும் ?. இந்த நிலைப்பாடே அதிக அளவில் மாட்டினங்கள் அழிந்து போக காரணமாகின்றன . இந்த ஒரே காரணத்தால் தான் ஜல்லிக்கட்டு ,கம்பாலா மற்றும் ரேக்ளா பந்தயம் போன்ற பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டிய தேவைப்படுகிறது .
ஊடகங்களிலும் சரி சமூக வலைத்தளங்களிலும் சரி ஒரு சாரார் முன் வைத்த கேள்வி மாட்டை கொன்று தின்பார்களாம் ஆனால் ஜல்லிக்கட்டு மட்டும் அனுமதிக்க மாட்டார்களாம் என்ன நியாயம் இது எனபது .
இந்த தேசம் பலதரப்பட்ட சமூக , இன , மத பழக்கவழக்கங்களை உடைய மக்களை கொண்ட துணைக்கண்டம் . தொன்று தொட்டே மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் சில சமுதாய மக்களிடம் இருந்து வந்துள்ளது . அப்படி இருக்க சில மதவாத அமைப்புகள் மாட்டுக்கறிக்கு எதிராக அரசியல் செய்து வருவது துரதிஷ்டவசமானது . அதுவும் ஜல்லிக்கட்டில் இதை கலப்பது மிகவும் தவாறானது .
இவர்களிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்புகிறேன் . மாட்டுக்கறிக்கு எதிரான கொள்கைகள் கொண்ட பசுவை புனிதமாக வணங்கும் ஒரு தேசம் எப்படி மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்க முடியும் . ஆக மாட்டினங்களை காக்க நீங்கள் உண்மையிலேயே விரும்பினால் மாட்டுக்கறி உண்பவர்களை விடுத்து அதை ஏற்றுமதி செய்வதை எதிர்த்து நில்லுங்கள்
ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்பவர்களான பூர்வா ஜோஷிபுரா தொடங்கி ராதா ராஜன் அம்மையார் வரை அனைவரும் ஆர்.எஸ் .எஸ் மற்றும் பா.ஜ,க பிரமுகர்களாக இருப்பது விந்தையிலும் விந்தை (ஆர்.எஸ் .எஸ் அமைப்பு ஜல்லிக்கட்டை எதிர்க்கிறதுன்னு சொன்னா நாம தேச துரோகி ஆயிடுவோம் மக்களே )
அடுத்ததாக இப்பொழுது ஜல்லிக்கட்டுக்கு எதிராக கியுபா (திட்ட கூட முடியாத ஒரு பேர வச்சி தொலைச்சிட்டானுவளே ) என்ற அமைப்பு தடை கேட்டுள்ளது . போராட்ட காலத்தில் நமது பார்வை முழுக்க முழுக்க பீட்டாவின் மேல் மட்டுமே இருந்தது . ஜல்லிக்கட்டு முதன் முதலில் தடை வாங்கிய AWBI (Animal Welfare Board Of India)தொடங்கி புளு கிராஸ் வரை பல அமைப்புகள் இருந்தாலும் தற்போதைக்கு சிக்கியிருந்த பீட்டாவின் மேல் மட்டும் நமது எதிர்ப்பு சென்றது ஒரு வகையில் அவர்களுக்கு நன்றாக போய்விட்டது.
ஜல்லிக்கட்டு என்பது ஆதிக்க சாதியினரின் விளையாட்டு என்ற கருத்து நிலவுகிறது . இதை பல ஆய்வாளர்கள் மறுத்த போதிலும் எனக்கு ஒரு கேள்வி மட்டும் எழவே செய்கிறது . ஐவகை நிலவகைகள் தோன்றிய காலங்கள் தொட்டு ஒரு மனிதன் சாதி போன்ற சமுதாய /சமய அடையாளங்கள் அவன் செய்யும் தொழிலை சார்ந்தே தோன்றியுள்ளன . வேளாண்மையும் ஆநிரை மேய்த்தலும் நிச்சயம் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே செய்து வந்திருக்க முடியும் . எனக்கு தெரிந்த மட்டில் விவசாயம் சில குறிப்பிட்ட ஆதிக்க சாதி மக்களால் அதிகம் செய்யப்படுகிறது (அல்லது அநேக நில உடைமையாளர்கள் ஆதிக்க சாதியினராக மட்டுமே இருந்திருக்கிறார்கள் ) . அப்படி இருக்க ஜல்லிக்கட்டு என்பது ஒரு சாதி சார்ந்த நிகழ்வு இல்லையென்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை . கார்த்திகேய சிவசேனாபதியம் ஆதியும் இதற்கு சிறந்த உதாரணங்கள் .
ஆனால் அதற்காக ஜல்லிக்கட்டை என்னால் புறக்கணிக்க முடியவில்லை . முன்பே சொன்னது போல் இங்கு கலாச்சாரம் என்பது கூட மக்களை பொறுத்து மாறுபடுகிறது . அப்படி இருக்க எந்த தரப்பு மக்களாக இருந்தாலும் சரி அவர்களின் வாழ்வியல் சார்ந்த காரணிகள் காப்பாற்ற பட வேண்டியவையே .
அடித்தட்டு மக்களின் நலனும் பழக்கவழக்கங்களும் காப்பாற்ற படவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை . ஆனால் அதற்காக ஆதிக்க சாதியினரின் பழக்கவழக்கங்களை புறந்தள்ளுவதையோ மிதிப்பதையோ என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை .
பின்குறிப்பு :
முன்னரே எழுதி இருக்க வேண்டிய பதிவு . எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தது போல ஆகிவிடக்கூடாது என்பதால் கொஞ்சம் தாமதமாக எழுதுகிறேன் . இதில் உள்ள கருத்துக்கள் முழுக்க முழுக்க எனது புரிதல்கள் மட்டுமே . இது தவறு என நீங்கள் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டி காட்டும் பட்சத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் .