November 17, 2013

ரிஷிமூலம் ,கி.மு கி.பி -புத்தகம் பற்றிய பேச்சுக்கள்

ரிஷிமூலம்

திரு. ஜெயகாந்தன் அவர்கள் எழுதி பெரும் சர்ச்சையை உண்டாக்கி ,இன்று வரை விமர்சிக்கப்படும் ரிஷிமூலம் எனும் நாவல் படித்தேன்.இந்நாவல் எதிர் கொண்ட பிரச்சனைகளையும் தன் நிலைப்பாட்டையும் தன் பெரிய முன்னுரையில் தெளிவாகவே ஜெயகாந்தன் சொல்லி விடுகிறார் .காமம் சார்ந்த உளவியல் ரீதியான ஒரு கதையை எடுத்து அதை தனக்கே உரிய பாணியில் சொல்லி இருந்தார் .தன் வாழ்கையை ஒரு கட்டுப்பாடோடு வாழும் ஒரு பக்குவப்படாத மனிதனின் மனநிலையில் வாழ்க்கை நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றத்தின் பிரதிபலிப்புகளை அவன் எங்கனம் ஏற்று கொள்கிறான் என்பதே கதையின் மூலம்.இக்கதையின் நாயகனான ராஜாராமனை உலகம் பார்க்கும் பார்வையும் ,உலகத்தை அவன் பார்க்கும் பார்வையும் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை ஜெயகாந்தன் அழகாக சொல்லி இருந்தார்

தன் வாழ்வில் எந்த பற்றுமில்லாமல் வாழும் அவன் இந்த உலகத்தில் இருந்து தப்பிக்க பக்தி எனும் ஆயுதத்தை தேர்ந்தெடுக்கிறான் .கடைசியில் அவன் விரக்தி அவனை எங்கு கொண்டு போய் நிறுத்துகின்றது என்பதே முடிவு .


நாகரிகம் ,பண்பாடு போன்ற முகமூடிகளை களைந்து விட்டு மனிதம் என்ற அடிப்படை உணர்வோடு மட்டுமிந்த நாவலை படிக்கவும்.

இது படிக்க வேண்டிய நாவல் என்றோ படிக்க கூடாத புத்தகம் என்றோ கூறும் அளவுக்கு உளவியல் சார்ந்த பக்குவம் எனக்கில்லை .என்னைபொறுத்த மட்டில் ஒரு சாதரணமான நாவல் அவ்வளவுதான் ........

படைப்பாளிகள் சமூக கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது என் கருத்து





ரிஷிமூலம்
வகை :குறுநாவல்
ஆசிரியர் :ஜெயகாந்தன்
பதிப்பகம் :மீனாட்சி புத்தக நிலையம்
விலை :55


கி.மு கி.பி

திரு .மதன் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் உலகம் உண்டான காலகட்டத்தில் இருந்து முந்தைய வரலாற்று காலம் வரை உலகமும் அதில் உறையும் உயிரினங்களும் கண்ட பரிணாம வளர்ச்சி மற்றும் மாற்றங்களையும் அழகாக கூறுகிறது. மனிதன் உருவான கதை ,அவன் நாடோடியாய் வாழ்ந்து திரிந்தது என ஆரம்பிக்கிறது. மனிதன் நிலையாக ஒரு இடத்தில வாழ ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி பற்றியும் அவன் அடைந்த மாற்றங்கள் பற்றியும் அழகாக சித்தரிக்கிறது.முதலில் மெசபட்டோமிய நாகரிகம் பற்றியும் அதன் அரசர்கள் உருவானது ,மக்களின் வாழ்க்கை முறை என ஒவ்வொன்றாக விளக்குகிறது.

உலகின் முதன்மை இலக்கியமாக கருதப்படும் கில்டுமேஷ் கதை மிக அருமை .உலகிற்கு முதன் முதலில் சட்டம் தந்த மன்னன் ஹமுராபி பற்றி அறிய முடிகிறது .அவன் சட்டதிட்டங்களில் இருந்த நுட்பமும் முற்போக்கு சிந்தனையும் வியக்க வைக்கின்றன .பிறகு எகிப்திய ,கிரேக்க நாகரீகங்களின் தோற்றத்தையும் அதன் சிறப்புகளையுமரிய முடிந்தது .

சூரியனை மட்டுமே கடவுளாய் நம்பிய மன்னன் ஆக்நெடான் ,அதிசய ஆலயமான அபூஸிம்பெல் போன்றவற்றை பற்றி அறியும்போது வியப்பு மேலிடுகிறது

பின் கிரேக்க -பாரசீக போர்கள் பற்றியும் ஏதென்ஸ் நகரின் எழுர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றியும் அடுத்தடுத்த பக்கங்கள் நிறைகின்றன

நாடகங்களின் தந்தை ஹிராடேடஸ் ,சாக்ரடீஸ் புளுட்டோ என பலரை பற்றி அறிய முடிந்தது.சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் கொல்லபட்டவரையிலான இடை காலத்தில் அவரின் போக்கை அழகாக நேரில்கண்டு தந்திருக்கும் ப்ளுட்டோ பற்றிய பக்கங்கள் அருமையிலும் அருமை

இந்தியாவின் முதல் மிக பெரிய சாம்ராஜ்யமாக கருதப்படும் அசோகரின் மௌரிய சாம்ராஜ்யதோடு இப்புத்தகம் முடிகிறது

பல நாகரீங்களை பற்றியும் அவற்றோடு நம் சிந்து சமவெளி நாகரீகம் எப்படி மேம்பட்டுள்ளது என்பதை பற்றி சொல்லி இருப்பது சிறப்பு


மற்ற நாகரீகங்கள் இன்று முழுமையாக அழிந்து விட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் மக்கள் ஓரளவுக்கு தங்கள் பழைய நாகரீகத்தோடு வாழ்ந்து வருகிறார்கள் என்பதை என்னும் போது ஒரு இறுமாப்பு ஏற்படத்தான் செய்கிறது



கி .மு கி .பி
வகை : நாகரிகங்கள் பற்றிய ஆய்வு நூல்
ஆசிரியர் :மதன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை :130/-

No comments:

Post a Comment