October 05, 2013

கடல் புறா - புத்தகம் பற்றிய பேச்சு(BOOK TALK)

அண்மையில் சாண்டில்யன் அவர்கள் எழுதிய கடல் புறா என்ற வரலாற்று புதினம் படித்தேன்.
என் சிறு பிராயம் முதலே வரலாற்று நிகழ்வுகள் மீது தீராத காதல் இருந்து வந்தது. தமிழர்களின் வீரம், வெற்றி, மற்றும்கொடை முதலியவற்றை நூல்கள் மூலமாகவே அறிந்து கொள்ள முடிந்தது. தமிழர்களின் வீரத்தை பெரும் போர்கள் படை சாற்றின. போர் என்று சொன்னாலே காலாட்படை ,யானைப்படை, வாள்சண்டை, வில்போர் குதிரைப்படை இவை தான் நினைவுக்கு வரும்.இதை எல்லாம் தாண்டி ஒரு புதிய அனுபவத்தை கடல் புறா எனக்கு நல்கியது


தமிழர்களின் கடலாதிக்கத்தை நாம் கொஞ்சம் தான் அறிவோம். திரை காதல் ஓடியும் திரவியம் தேடியவர்கள் நம் தமிழ் வணிகர்கள். நாம் மன்னர்கள் கடல் கடந்து சென்று போர்கள் பல நடத்தி ஆட்சியை விஸ்தரிப்பு செய்தார்கள். ஆக கடலின் சிறப்பை பற்றியும் கடல் போர்களை பற்றியும் ஒரு தெளிவான புரிதலை கடல் புறா வழங்கியது.


கதையின் நாயகனான கருணாகர பல்லவன் ஒரு தூதுவனாய் அறிமுகம் ஆகிறான். ஆனால் சூழ்நிலை அவனை குற்றவாளியாக பார்க்க வைக்கிறது. சோழ இளவரசன் அநாபயர் உதவியுடன் அங்கிருந்து தப்பிக்கிறான். சிறையில் இருந்து தப்பினாலும் காஞ்சனா என்ற பெண்ணின் இதய வலையில் இருந்து தப்ப முடியவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் அகூதா என்ற  சீன கடல் கொள்ளையான் இடம் உப தளபதியாக இருந்து
கடல் பயணங்களை பற்றியும் கடல் போர்களை பற்றியும் அனுபவம் பெறுகிறான் . பின்பு சோழர்களின் கடல் வலிமையை உயர்த்த பலகடல் போர்களில் ஈடுபடுகிறான். கடல் போர்கள் ஒவ்வொன்றையும் சாண்டில்யன் விவரிக்கும் விதம் நம்மை அந்த காலகட்டத்துக்கே இழுத்து செல்கிறது


இந்த சூழ்நிலையில் மஞ்சளழகி என்ற பெண்ணிடமும் மனதை பறிகொடுக்கிறான். இருவருமே இளவரசிகள் தனக்கு கிடைக்க மாட்டார்கள் என்று எண்ணி குழம்புகின்றான். கடாரம், ஸ்ரீவிஜயம்  முதலிய பெரும் பகுதிகளை அவனால் வெல்ல முடிகிறதா ? காதலித்த பெண்களை கரம் பிடிக்கிறனா ? என்பது கதையின் முடிவு


கடலை பற்றிய வர்ணனை எனக்கு கடலை பற்றிய ஆவலை கிளறி விட்டுள்ளது. சொர்ணதீவு, பாலிதீவு  உள்ளிட்ட தீவுகளின் வர்ணனையும் அருமை. கப்பல் கட்டுதலில் தமிழர்களின் தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது. போயர் எழுதிய கல்பதரு என்னும் நூலும் அதன் ஆங்கில ஆக்கமான INDIA SHIPPINGS by Banerjee  என்ற நூலும் நமக்கு அதை புலப்படுத்துகின்றன. மூன்று பாகங்களை கொண்ட  இந்த படைப்பில்  சில வரிகளை எடுத்து காட்டலாம் என்றால்  அதுவே ஒரு பெரும் கட்டுரையாகிவிடும்.

போர்களில் தன வீரத்தால் பேரு வெற்றிகளை பெரும் கருணாகரன்  இரு பெண்களின் அன்புக்கு முன்னால் தடுமாறுவது மிக அழகு.

உலகின் மிக சிறந்த கடலோடிகளாகவும் கடல் போர்களில் வென்றவர்களாகவும் எம்  முன்னோர்கள் உள்ளார்கள் என்றென்னும் பொது பெருமையாக இருக்கிறது

பி.கு

நாவலை படித்த ஆறு நாள் மட்டுமல்லாமல் ஒரு மாதம் என்னை இந்த கதையிலேயே ஒரு பார்வையாளனாக பயணப்பட வைத்து விட்டார் சாண்டில்யன். 
ஒவ்வொரு கடல் போரையும் பக்கத்தில் நின்று பார்த்தது போல் இருந்தது
ஆக ஒரு மாத தாமதமாகி விட்டது.

அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம்

வாழ்க தமிழ் !! வெல்க தமிழ் !!

No comments:

Post a Comment