December 21, 2013

இந்திய விளையாட்டுகள் - பகுதி 2

இந்திய விளையாட்டுகள் - பகுதி 2
கிரிக்கெட்டினால் வந்த விளைவு

நம் நாட்டில் நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன.அவற்றில் கிரிக்கெட் மட்டுமே முதலாய் பார்க்க படுகிறது .கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதை தாண்டி மக்களின் உணர்வாகவே மாறி விட்டது வருந்ததக்கது. (பாகிஸ்தான் உடன் தோற்றால் அது அவமானமாகி விடுகிறது. பாகிஸ்தான் நம்மை நெஞ்சுக்கு நெஞ்சாக சந்திக்கும் எதிரி ஆனால் சில முதுகில் குத்தும் துரோகிகளுடன் நாம் சந்தோசமாக விளையாடிக்கொண்டுதானே இருக்கிறோம் )

கிரிக்கெட்டின் விளையாட்டின் வளர்ச்சி மற்ற விளையாட்டுகளை அதிக அளவில் பாதித்திருக்கிறது. மற்ற விளையாட்டுகளை மக்களும் அரசும் புறக்கணிக்க கிரிக்கெட் காரணமாகிறது. அதிக லாபம் தரும் கிரிக்கெட் அரசுக்கு முக்கியமாகிவிட்டது. இத்தனைக்கும் பிசிசிஐ இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதில்லை .எனவே அது ஒரு தனியார் அமைப்பு .ஒரு தனியார் அமைப்பு நாட்டின் பெயரையும் தேசிய கொடியையும் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம். மேலும் ஒரு இந்தியனாக இந்திய கிரிக்கெட் அணியையோ அல்லது அதன் வீரர்களையோ நான் support செய்ய வேண்டியதில்லை.




நமது தேசிய விளையாட்டை பற்றி நாம் அறியாதிருப்பது மிகவும் வருந்ததக்கது. ஒரு காலத்தில் நம் அணியின் வெற்றிகள் வார்த்தையால் விவரிக்க இயலாதது.உலகின் அணைத்து அணிகளையும் பந்தாடியுள்ளோம்.மேஜர்.சர் .தயான் சந்த் அவர்களின் தலைமையில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் ஆக நாம் வலம் வந்த காலம் மறக்க முடியாதது.



இன்று நாம் வலு குறைந்து இருக்கலாம்.அதற்கு ஆட்ட வீரர்களின் திறன் காரணம் இல்லை. களத்துக்கு பதிலாக நவீன புல்தரையில் ஹாக்கி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஆசிய அணிகளின் ஆதிக்கம் குறைந்து விட்டது. அரசு கிரிக்கெட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை தன் இஷ்டப்படி பிசிசிஐ ஆட்டிவைக்கிறது. அணைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட பலவற்றை பிசிசிஐ எதிர்க்கிறது.ஆனால் ஹாக்கிஇல நம் உரிமைகளை தாரைவார்த்ததொடு வளர்ச்சி பணிகளிலும் மெத்தனம் காட்டுகின்றது. மைதானங்களின் தரம் கேள்விக்குரியதாய் உள்ளது அதே போல் அதிக அளவில் உள்நாட்டு போட்டிகள் நடத்தப்படுவதில்லை.


ஹாக்கிஇல் ஒரு குறிப்பட்ட மாநிலத்தவரின் ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது .அதை தவிர்த்து அணைத்து பகுதிகளின் சிறந்த வீரர்-வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக விளையாட்டு வீரனுக்கு மக்கள் மத்தியில் கிடைக்க பெரும் பாராட்டுதான் அவனுக்கு ஊக்கம் அளிக்கும்.எனவே அணைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் தர வேண்டும்.இந்த தொடக்கம் முதலில் ஊடகங்களில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக சமூகம் முழுக்க பரவ வேண்டும்


ஹாக்கி மட்டும் இல்லை மற்ற விளையாட்டுகளுக்கும் இதே நிலை தான். கபடியில் காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் பெரு வெற்றிகள் பெற்ற அணியினரை நாம் கண்டு கொள்ளவே இல்லை. வில்வித்தையில் அண்மையில் நடந்த உலக சுற்று போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் physiotherapist இல்லாமல் கடும் உடல் நல குறைவுடன் ஆடி வெள்ளி பதக்கம் பெற்றனர். அவர்களை பற்றி யாரும் கவலைப்பட வில்லை.குத்துசண்டை போட்டியில் தலைகவசம் இன்றி சண்டையிடும் புதிய விதிக்கு எந்த கருத்தும் தெரிவிக்காமல் அதன் சம்மேளன தலை பதவி ஆசையில் அடித்து கொண்டிருந்தோம்.பாட்மிட்டன் விளையாட்டில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய ஆடை 'குறைப்பை' பற்றியும் நாம் பேச வில்லை.


இவ்வாறாக மற்ற விளையாட்டுகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் நம்மை பாதிப்பதை பற்றி நாம் கவலைப்பட வில்லை .மாறாக IPL போட்டிகளில் பணத்தை வாரி இறைத்து /குவித்து கொண்டிருந்தோம்.
வாள்சண்டை போன்ற விளையாட்டுகளில் நாம் பின் தங்கியிருக்க காரணம் திறமையின்மை அல்ல ,போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததுதான். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாரம்பரிய விளையாட்டுகளை உள்ளே கொண்டு வரும்போது நாமும் கபடியை கொண்டு வரலாம்.


கிரிக்கெட் வேண்டாம் என நான் கூறவில்லை. கிரிக்கெட்டின் பலத்தை குறைக்கலாம் என்பதே என் கருத்து. இந்திய வீரர்களின் சம்பளம் மற்ற அணி வீரர்களை காட்டிலும் மிகவும் அதிகம்.எனவே அவற்றை குறைத்து முறைப்படுத்தலாம்.பிசிசிஐ தன்னிச்சையாக செயல்படாமல் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட வேண்டும்.இதன் மூலம் அணைத்து விளயாட்டுகளையும் சமமாக பாவிக்கும் அரசின் மனப்பான்மை மக்களையும் மாற்றும். மற்ற விளையாட்டுகளில் கொண்டு வரப்படும் புதிய விதிகளை அவற்றின் சாதக பாதகங்களை கணக்கில் கொண்டு ஆராய்ந்து ஆதரிக்க அல்லது எதிர்க்க வேண்டும்.புதிய கிரிக்கெட் மைதானங்கள் உண்டாக்குவதற்கு பதிலாக கால்பந்து ,ஹாக்கி போன்ற இதர விளையாட்டு மைதானங்களையும் ஏற்ப்படுத்த வேண்டும்.


இதன் மூலம் இதர விளையாட்டுகள் புத்துயிர் பெரும்.வில்வித்தை ,துப்பாக்கி சுடுதல் ,மல்யுத்தம் ,குத்துசண்டை போன்ற விளையாட்டுகளில் நாம் தனி பெரும் சக்தியாக திகழும் காலம் வெகு தொலைவில் இல்லை.அணைத்து விளையாட்டுகளிலும் நம் வீரர்கள் முத்திரை பதிக்க காத்து கொண்டிருக்கின்றனர் .அவர்களுக்கு வேண்டியது முறையான வழிகாட்டுதலும் உங்கள் கைதட்டல்களும் தான்




பி.கு :

இந்தியாவின் C நிலை வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தென் ஆப்பிரிக்காவின் முதல் நிலை வீரர்களுக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதில்லாமல் IPL மற்றும் விளம்பரங்களில் அவர்கள் ஈட்டும் ஊதியம் மிக அதிகம். எனவே மற்ற அணியினரை போல் அவர்களுக்கும் ஊதியம் வழங்கலாம்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். IPL இல் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட கூடாது என இரண்டாவது தொடரில் தீர்மானிக்கப்பட்டது .ஆனால் இன்று வரை இலங்கை வீரர்கள் ஆடிக்கொண்டு தானே இருக்கிறார்கள்.இந்த தொடரில் மட்டுமே சிலர் பிரச்சனயை கிளப்பினார்கள். சென்ற தொடர் வரை சென்னை அணியிலேயே குலசேகரா,ரண்டிவ் போன்ற வீரர்கள் ஆடியதை யாரும் கண்டு கொள்ளவில்லையே . ஏன் ?? ஒருவேளை நியாயம் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுமோ ????

விளையாட்டு என்பது வேறு அரசியல் என்பது வேறு என கூறும் இவர்கள் அதை அணைத்து பிரச்சனைகளிலும் கடைபிடிக்க வேண்டுமல்லவா??
எனக்கு அரசியல் எல்லாம் தெரியாதுங்க .நீங்களாவது சொல்லுங்க


report abuse செய்ய கூடாது என்பதற்காக இதற்க்கு வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் எனும் காலன் எனும் தலைப்பை மாற்ற வேண்டி வந்தது.



நன்றி வணக்கம்

No comments:

Post a Comment