இராஜேந்திர சோழர் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டுவிழா மற்றும் பொன்னியின்
செல்வன் அரங்கேறிய அறுபதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு
பகுதியாக Cholan Heritage Preservator & Historical research Foundation சார்பில் இலக்கிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நண்பர்கள் வர சிறிது நேரம் ஆனதால் அந்த இடைப்பட்ட நேரத்தில் மழலைகளாய் மாறி மணலில் எங்கள் கலைத்திறனை காண்பித்தோம்
அணைத்து நண்பர்களும் வந்தவுடன் ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்தி கொண்டோம். கடைசியாக படித்த புத்தகங்கள் பற்றி சிறிது நேரம் பேசினோம்
நண்பர் வெங்கட், திரு சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம் எனும் நாவலை
பற்றி பேசினார். அவருடைய பேச்சை கேட்டவுடன் அதை படிக்க வேண்டும் என்ற
எண்ணம் அனைவருக்கும் உருவாகி விட்டது
நண்பர் ஹரி
சில ஆங்கில நாவல்கள் பற்றி பேசினார். உளவியலின் தந்தை என போற்றப்படும்
சிக்மண்ட் பிரைடு எழுதிய Interpretation of Dreams என்ற புத்தகத்தை
விரைவில் படிக்கபோவதாக சொன்னார்
பிறகு சந்திப்பின் முதல் தலைப்பான
பொன்னியின் செல்வன் உங்கள் பார்வையில்
பிரமாண்டம்
பிரமாதம்
பிரமிப்பு
நண்பர்கள் பேச தொடங்கினோம். பொன்னியின் செல்வன் படித்து முடித்திருந்த
அனைவரும் பொன்னியின் செல்வன் பற்றிய தங்கள் பார்வையை முன்வைத்தனர் .
நண்பர்கள் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் பற்றியும் பிடிப்பதற்கான
காரணங்கள் பற்றியும் சொல்லியது மிக சிறப்பாக அமைந்தது
பயணங்களில் ஆர்வம் கொண்ட நண்பர் ராஜ் பன்னீர்செல்வம்
கல்கி ஒவ்வொரு இடங்களையும் வர்ணித்து நம் கண்முன் கொண்டு வந்து
நிறுத்தியதை பற்றி பேசினார் . பொன்னியின் செல்வன் குறித்து நண்பர்கள் பேசிய
விதம் அவர்கள் மனதில் எந்த அளவு ஒரு தாக்கத்தை கல்கி ஏற்படுத்தி
இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.இது அங்கு வந்திருந்த வாசிக்காத
நண்பர்களிடம் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.
எழுத்து சித்தர் பாலகுமாரன் படைப்புகள் பற்றி ஒரு நண்பர் பேசியது சிறப்பாக அமைந்தது
காற்று வாங்க கடற்கரைக்கு வந்திருந்த நண்பர் ரயென் மேக்ஸ்வின் எங்களது
பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு எங்களோடு கலந்து கொண்டார். தமிழர்களின்
கடலாதிக்கம் குறித்து அறிய வேண்டும் என்று புது தேடலையும் என்னுள்ளே
ஏற்படுத்திவிட்டார்.மேக்ஸ்வின் தொ.பரமசிவன் எழுத்துக்களை பற்றி அதிகம்
பேசினார்
எங்களுக்கு இடைவேளை வேண்டும் என்பதை ஒரு காளை மாடு துரத்தி உணர்த்தியது.
என்னுடன் வந்திருந்த நண்பர் நரசிம்மனும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார்
இது ஒரு நல்ல தொடக்கமாக நிச்சயம் இருக்கும். பின்னால் பெரு விருட்சமாக வளர இருக்கும் இதற்கான விதை இனிதே போடப்பட்டுவிட்டது
No comments:
Post a Comment