November 20, 2013

சேரன் செல்வி -புத்தகம் பற்றிய பேச்சு

திரு.சாண்டில்யன் அவர்கள் எழுதிய சேரன் செல்வி வரலாற்று புதினம் படித்தேன். மாலிக் கபூரின் தென்னிந்திய படையெடுப்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஒரு சரித்திர நவீனம். மாலிக் கபூரின் தென் நாட்டின் மீது படையெடுத்து கொள்ளையை முடித்து சென்று விட்ட பிறகு அவன் தளபதி குஸ்ரூகான் தென்னிந்தியாவில் ஒரு முகம்மதிய அரசை நிறுவ எண்ணுகிறான். வீர பாண்டியன் -சுந்தர பாண்டியன் இடையே மூளும் வாரிசுரிமை போட்டியை தனக்கு சாதகமாக்கி தன் ஆசையை நிறைவேற்ற முயல சேர மன்னர் ரவிவர்மன் குலசேகரன் எங்கனம் அதை முறியடிக்கிறார் என்பதே கதை ←

பாண்டிய நாட்டில் இருந்து புலவர் ஒருவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் வாலிபன் இளவழுதி சேர நாட்டின் தளபதியாக நியமிக்க படுகிறான்.சந்தித்த பொழுதே சேர இளவரசி இளமதி மேல் மையலும் கொள்கிறான். மாலிக் கபூரின் ஒற்றன் அஜ்மல்கான் மன்னரை கொல்ல சதி செய்கிறான். அவன் இளவழுதியையும் தன் சதியில் இழுக்க பார்க்கிறான். போர் திட்டங்களை மாற்றி கூறி அவனை இளவழுதி ஏமாற்றுகிறான். மதுரையை ஆளும் வீரபாண்டியன் குஸ்ரூகானுக்கு உதவ அவர் மீது சினம் கொண்டு படையெடுக்கும் சேர மன்னர் அவரை இளவழுதியின் துணையோடு வெல்கிறார். அப்பொழுது சுந்தர பாண்டியன் கலகம் செய்ய அவனை அடக்க செல்லும் இளவழுதியை சமாதானம் பேச அழைத்து வஞ்சித்து கத்தியால் குத்தி விடுகிறான் .
சேர மன்னர் குஸ்ரூகானை வென்றாரா ? இளவழுதி உயிர் பிழைத்தானா? கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவள் என சொல்லப்பட்ட இளமதியை இளவழுதி மணம் புரிந்தானா போன்ற கேள்விகளுக்கு விடை கூறி விடைபெற்றது புதினம்.


தமிழ் புலவர் ,கவி சமுத்திரபந்தன் ,கவிபூசணன் என பல்வேறு கவிஞர்களின் உரையாடல்கள் மிகவும் அருமை. இளவழுதி -இளமதி காதல் காட்சிகளில் இன்பரசம் சொட்டுகிறது. தமிழரின் பெருமையை மீண்டும் உயர்த்த பாடுபட்ட மன்னர் ரவிவர்மன் குலசேகரன் பிரம்மிக்க வைக்கிறார்

போர்க்கள காட்சிகள் ,படை அணிவகுப்பு ,போர் வியுகங்கள் என தனக்கே உரித்தான பாணியில் கதையை அற்புதமாக நகர்த்திஇருந்தார் சாண்டில்யன்



சேரன் செல்வி
வகை :சரித்திர நாவல்
ஆசிரியர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதப்பகம்
விலை :145


↮எண்டமூரி விரேந்தர்நாத்தின் மற்றுமொரு அரிய படைப்பான சாகர சங்கமம் எனும் நாவல் படித்தேன். தான் சரியாக இருப்பதாகவும் மற்றவர்களும் தன்னிடம் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தரளா எனும் பெண்மணியால் வரும் விளைவே சாகர சங்கமத்தின் கதை .

தரளா ,தன் காதலை பணம் எனும் மாயையால் இழந்த ஆனந்தன் மற்றும் தன் தோழிக்காக தன் காதலை தியாகம் செய்து தன் காதலருக்காக வாழும் பிருந்தா ஆகிய மூன்று நதிகளின் பிணைப்பு மற்றும் பிரிவே சாகர சங்கமம் கதை. கதையின் ஓட்டத்தை காவிரி நதியின் ஓட்டத்தோடு சேர்த்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர்.கதையை அந்தந்த கதாபாத்திரங்களே சொல்வது போல் நகர்த்தி இருப்பது சிறப்பு.பல்வேறு திருப்பங்கள் ,ஆச்சர்யங்கள் என முதல் அத்தியாயத்தில் ஆரம்பிக்கும் கதையின் வேகம் கடைசி அத்தியாயம் வரை தொடர்வது சிறப்பு. படிப்பதற்கு ஒரு நல்ல இனிய அனுபவத்தை வழங்கி தன் சங்கமத்தை நிறைவு செய்தது நாவல்


சாகர சங்கமம்
வகை :சமூக நாவல்
ஆசிரியர் :எண்டமூரி விரேந்தர்நாத் (தெலுங்கு )
மொழிபெயர்ப்பு :கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ் பதிப்பகம்
விலை :110

No comments:

Post a Comment