November 20, 2013

கம்யுனிசம் நேற்று -இன்று-நாளை புத்தகம் பற்றிய பேச்சு

கம்யுனிசம் நேற்று -இன்று-நாளை புத்தகம் பற்றிய பேச்சு


மு.கு : இந்த புத்தகம் படிப்பதால் நீங்கள் கம்யூனிஸ்ட்டாக மாறி விடமாட்டீர்கள்.கம்யுனிசம் குறித்து வெளியே சொல்லப்படும் பல குறைகளையும் தவறுகளையும் தர்க்க ரீதியாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் மறுக்கும் முயற்சியே இது. இதை படிப்பதால் உங்கள் பொன்னான நேரம் வீணாகாது என நான் உறுதி கூறுகிறேன். சமீப காலங்களில் நான் படித்ததில் இது சிறந்த புத்தகம் என்பது என் கருத்து. இது உலகம் மீதான என் குறுகிய பார்வையை எனக்கு உணர்த்தி விசாலமாக்க உதவியது

தோழர் ஜவகர் எழுதி நக்கீரன் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரையே இது. அதிக அளவில் விற்று சாதனை செய்துள்ள இந்த புத்தகத்தை பெரும் தேடலுக்கு பின் அண்மையில் வாங்கினேன்.
முதலாளித்துவத்தின் தோற்றமும் அதனால் உலகில் ஏற்ப்பட்ட பல விளைவுகளில் இருந்து இந்த புத்தகம் ஆரம்பிக்கிறது. முதலாளித்துவ நாடுகள் பிற நாடுகளை ஆக்கிரமித்து அவற்றை எவ்வாறு சுரண்டினார்கள் என்பதையும் எவ்வாறு காலனி நாடுகள் உருவாயின என்பதையும் அழகாக சித்தரித்திருக்கிறார் இதன் ஆசிரியர் .


முதலாளித்துவத்தின் சித்தாந்தம் கொலையில் தொடங்கியதாகவும் கம்யுனிசத்தின் சித்தாந்தம் அமைதியில் தொடங்கியதாகவும் கூறி அடுத்தடுத்த பக்கங்களுக்கு நம்மை ஆர்வத்துடன் செல்ல வைக்கிறார் மார்க்சிய தத்துவம் ,பொருளாதாரம் போன்றவற்றையும் ,கருத்து முதல் வாதம் ,பொருள் முதல் வாதம் இயக்கவியல் போன்ற கோட்பாடுகளை பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தந்திருப்பது சிறப்பு


என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்த பக்கங்கள் ,கம்யுனிச கோட்பாடுகளையும் தத்துவங்களையும் Theory of relativity மற்றும் quantum theory போன்றவற்றை கொண்டு விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருப்பதுதான்.இது எனக்கு அபூர்வமாக தோன்றியது ஏனெனில் இவ்வாறு நான் கேள்விபட்டது கூட கிடையாது


மார்க்சியத்தை விஞ்ஞானம் என விளக்கியிருப்பதும் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் மார்க்ஸ் ,எங்கெல்ஸ் ,லெனின் ஆகியோரின் பங்களிப்பை பற்றியும் தெளிவாக உணர முடிந்தது.
புரட்சி ஏற்பட்டு சோவியத் ரஷ்யா (USSR ) உதித்தது ,அதன் பிரம்மிக்க தக்க அசுரவேக வளர்ச்சி ,அதன் வீழ்ச்சிக்கான காரணங்கள் என அனைத்தையும் தந்திருப்பது நிறைவு .


ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யுனிசத்தின் பாதை மாற்றங்கள் மற்றும் அதன் காரணங்கள் தந்திருப்பது சிறப்பு

இந்தியாவில் கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றம் அது சந்தித்த பிரச்சனைகள் ,சாதனைகள் மற்றும் பிளவு என இரண்டாம் பகுதி நிறைகிறது

இப்புத்தகத்தின் சில துளிகள்

➤பொதுவுடைமை குறித்து பாரதியார் ,பாரதிதாசன் போன்ற இந்திய கவிஞர்களின் கவிதைகளை இடைசெறுகலாக தந்து படிக்கும் ஆர்வதை கூட்டி இருக்கிறார்கள்

➤பல அறிய புகைப்படங்களை காண முடிந்தது

➤ மூலதனம் உயர்ந்தால் வேலைவாய்ப்பின்மை தான் உயரும் என்பதை இந்தியாவை வைத்து சொல்லி இருப்பது சிறப்பு

➤அதிக புத்தகங்களிலும் அரசு கருவூலங்களிலும் இருந்து பல புள்ளி விபரங்களை கொடுத்திருப்பது சிறப்பு

➤ நவம்பர் புரட்சியின் திக் திக் 26 மணி நேரங்களை விவரித்திருக்கும் விதம் அருமை

➤முதலாளி -தொழிலாளி வர்த்தக உறவுகள் ,விஞ்ஞான சோசியலிசம் என நீள்கிறது

➤ சுஜாதா எழுதிய இரு புத்தகங்கள் தொடர்ந்து விமர்சித்தும் மறுத்தும் எழுதி என் அடுத்த தேடலை துவக்கி வைத்துவிட்டார் ஜவகர்

கம்யுனிசம் நேற்று-இன்று -நாளை
ஆசிரியர் : இரா .ஜவகர்
வகை : கம்யுனிசம் பற்றிய ஆய்வு
முன்னுரை : தோழர் நல்லக்கண்ணு மற்றும் தோழர் R .சௌந்திரராஜன்
பதிப்பகம் : நக்கீரன்
விலை : 160




பி.கு :

முன் குறிப்பில் அனைத்தையும் சொல்லிவிட்டேன்

அதனால்



நன்றி வணக்கம்
அடுத்த பதிவில் சந்திப்போம்

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழ் !!!

No comments:

Post a Comment